AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆர்யாவின் அனந்தன் காடு படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Ananthan Kaadu Movie Release Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் உருவாகி உள்ள அனந்தன் காடு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.

ஆர்யாவின் அனந்தன் காடு படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
அனந்தன் காடுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jun 2026 17:25 PM IST

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் ஆர்யா. அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் போதே இவரது கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மிஸ்டர் எக்ஸ். ஸ்பை த்ரில்லர் ஆக்‌ஷன் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ஆர்யா நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் அனந்தன் காடு. இந்தப் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரிலீஸ் தேதியை உறுதி செய்தது ஆர்யாவின் அனந்தன் காடு படக்குழு:

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் இந்த அனந்தன் காடு படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி உள்ள நிலையில் கதையை முரளி கோபி எழுதியுள்ளார். மேலும் இந்தப் படம் அதிகாரத்திற்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள ஒரு சோசியோ – பொலிட்டிகள் ஆக்‌ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ கடந்த 11 மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகின்ற 25-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… திருப்பி போற ஐடியாவே இல்லை.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா!

நடிகர் ஆர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அந்த இரண்டு ஜாம்பவான்கள் இல்லாமல் பஞ்சதந்திரம் 2 எப்படி உருவாகும்? ஜெயராம் ஓபன் டாக்

Follow Us