AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குஷ்புவின் மகளுக்கு திருமணம் – குடும்பத்துடன் பிரதமருக்கு அழைப்பு – மாப்பிள்ளை இவரா?

நடிகை மற்றும் பாஜக நிர்வாகியான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சியின் மகள் அனந்திதாவுக்கும் ஷ்ரவன் ஸ்ரீநிவாசன் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல் அழைப்பிதழை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஷ்புவின் மகளுக்கு திருமணம் – குடும்பத்துடன் பிரதமருக்கு அழைப்பு – மாப்பிள்ளை இவரா?
குடும்பத்தினருடன் பிரதமரை சந்தித்த சுந்தர்.சி - குஷ்பு தம்பதியினர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 May 2026 19:39 PM IST

நடிகை மற்றும் பாஜக நிர்வாகியான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சியின் மகள் அனந்திதாவுக்கும் ஷ்ரவன் ஸ்ரீநிவாசன் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல் அழைப்பிதழை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளனர். இயக்குநர் சுந்தர்.சி, குஷ்பு, அனந்திதா மற்றும் ஷ்ரவன் ஸ்ரீநிவாசன் ஆகியோர் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

குஷ்புவின் மகளுக்கு திருமணம்

பிரதமரை சந்தித்தது குறித்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மே 29, 2026 அன்று சந்தித்தோம். அப்போது நானும் எனது கணவர் சுந்தர்.சியும் இணைந்து எங்களது மகள் அனந்திதா மற்றும் ஷ்ரவன் ஸ்ரீநிவாசனின் திருமண அழைப்பிதழை வழங்கினோம். தம்பதியினரை பிரதமர் ஆசீர்வதித்தார். மேலும் தனது பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கியதற்காக நாங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டவர்களாகவும் பணிவுடனும் உணர்கிறோம். பிரதமருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us