கூடுவாஞ்சேரி பணிமனையில் பராமரிப்புப் பணிகள்.. 8 மின்சார ரயில்கள் நாளை ரத்து..
Cancellation OF Train: ஜூலை 17ஆம் தேதி சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, நாளை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, ஜூலை 16, 2026: சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (ஜூலை 17) 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அவ்வப்போது ஒவ்வொரு பணிமனையிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கேற்ப மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவது அல்லது முழுமையாக ரத்து செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மின்சார ரயில்களை நம்பி ஆயிரக்கணக்கான பயணிகள் தினசரி பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என காலை முதல் இரவு வரை மின்சார ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: கள்ளக்காதலனுடன் சேர கணவனைக் கொன்ற ஆந்திரப் பெண்.. தமிழக வாலிபர் பிணமாக மீட்பு.. கோவிலுக்கு சென்ற இடத்தில் பயங்கரம்!!
நாளை 8 மின்சார ரயில்கள் ரத்து:
As a part of ongoing engineering works, Line Block/Power Block is permitted in #ChennaiEgmore – #Villupuram section at #GuduvancheriYard on 17th July 2026.#SouthernRailway #RailwayUpdate #TrainServices #PassengerInformation #TravelAdvisory pic.twitter.com/IGrKDKrjdk
— DRM Chennai (@DrmChennai) July 15, 2026
இந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதி சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, நாளை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, பிற்பகல் 12.02, 12.30 மற்றும் 3.45 மணிக்கு செங்கல்பட்டுக்குப் புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் படிக்க: ஊழல் மற்றும் முறைகேடு புகார்.. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்!!
அதேபோல், மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 1.35, 2.15, 3.00 மற்றும் 4.25 மணிக்கு சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
பொது மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்:
பயணிகளின் வசதிக்காக, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 11.28, பிற்பகல் 12.00, 12.30 மற்றும் 3.45 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.30, 3.15, 4.00 மற்றும் 5.24 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் இந்த 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்றும், நாளை மறுநாள் முதல் வழக்கம்போல் இந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.