AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டுக்கு ஒப்புதல்?

CM Vijay Cabinet Meeting: தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகத் தாக்கல் செய்யப்பட உள்ள 2026-27ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் வரைவுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக, முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

முதல்வர் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டுக்கு ஒப்புதல்?
முதல்வர் விஜய், அமைச்சர்கள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Jul 2026 07:59 AM IST

சென்னை, ஜூலை 16: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 16, 2026) கூடுகிறது. தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகத் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

இதையும் படிக்க: லஞ்சப் புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு!!

தவெக அரசின் முதல் பட்ஜெட்:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, முதன்முறையாக இம்மாத (ஜூலை 2026) இறுதியில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளது. இது தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களைப் பெருமளவில் கவரும் வகையிலான பல்வேறு அதிரடித் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தவெக தனது தேர்தல் பரப்புரையின் போது மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமான சிறப்பான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பட்ஜெட் தயாரிப்பும் ஆலோசனையும்:

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வரும் ஜூலை 22ஆம் தேதி துறைவாரியாக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து ஆலோசனைகளை நடத்த உள்ளார்.

இதற்கிடையே, இன்று காலை 10:30 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது. இந்த முக்கியக் கூட்டத்தில், தயாராகி வரும் பட்ஜெட் வரைவு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, அதற்கு அமைச்சரவையின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி:

பட்ஜெட் விவாதங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், புதிதாகத் தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!

முக்கியத் துறைவாரியான தற்காப்பு மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் முதலமைச்சர் தலைமையில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கூட்டங்களில் பெறப்பட்ட பரிந்துரைகள் மற்றும் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது. தவெக அரசின் இந்த முதல் முழுமையான அமைச்சரவைக் கூட்டம் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

Follow Us