ICC World Cup: 14 அணிகள், 3 சுற்றுகள்.. உலகக் கோப்பைக்கான வடிவத்தை மாற்றிய ஐசிசி!
ICC Format Change For World Cup 2027: வரவிருக்கும் உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என ஐசிசி அறிவித்துள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னேற அணிகள் 3 சுற்றுகளைக் கடக்க வேண்டும். தகுதிபெற்ற 14 அணிகளில் கடைசி மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள், ரவுண்ட்-ராபின் முறையில் 'சூப்பர் சீரிஸ்' தொடரில் விளையாடும்.
வருகின்ற 2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையின் (ICC 2027 ODI World Cup) போட்டி வடிவத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. எடின்பரோவில் நடைபெற்ற அதன் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM) இந்த மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஐசிசி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன்படி, வரவிருக்கும் உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்கேற்கின்றன. இறுதி 3 அணிகளுக்காக ‘சூப்பர் சீரிஸ்’ நடத்தப்படும். இறுதிப் போட்டிக்கு முன்னேற 3 சுற்றுகள் நடைபெறும். எனவே, ஒருநாள் உலகக் கோப்பை தொடர்பான அனைத்து மாற்றங்களையும் விரிவாகப் புரிந்துகொள்வோம்.
ALSO READ: 14ல் இருந்து 12 ஆக குறையும் அணிகள்.. உலகக் கோப்பைக்கு திட்டம் வகுக்கும் ஐசிசி!
2027 ஒருநாள் உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்கேற்பு:
வரவிருக்கும் உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என ஐசிசி அறிவித்துள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னேற அணிகள் 3 சுற்றுகளைக் கடக்க வேண்டும். தகுதிபெற்ற 14 அணிகளில் கடைசி மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள், ரவுண்ட்-ராபின் முறையில் ‘சூப்பர் சீரிஸ்’ தொடரில் விளையாடும். இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.




இரண்டாம் சுற்று (30 போட்டிகள்)
மீதமுள்ள 12 அணிகள், தலா ஆறு அணிகள் கொண்ட 2 குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவும் ரவுண்ட்-ராபின் முறையில் போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளும், அக்குழுவிலிருந்து அடுத்த சிறந்த இடத்தைப் பிடிக்கும் அணியும் சூப்பர் 7 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 7 சுற்றின் 3வது கட்டம் (21 போட்டிகள்)
இந்தச் சுற்றில், 7 அணிகள் ரவுண்ட்-ராபின் முறையில் விளையாடும், இதில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இதில், முதல் மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்த அணிகளுக்கு இடையே ஒரு அரையிறுதிப் போட்டியும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த அணிகளுக்கு இடையே மற்றொரு அரையிறுதிப் போட்டியும் நடைபெறும்.
2028 டி20 உலகக் கோப்பைக்கான வடிவமும் மாற்றம்:
வரவிருக்கும் 2028 டி20 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் போட்டிகளில் தொடர்ந்து 20 அணிகள் பங்கேற்கும். போட்டியின் 2ம் கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான அணிகளை அனுமதிக்கும் வகையில், இந்தத் தொடரின் திருத்தப்பட்ட வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லீக் ஸ்டேஜ் (30 போட்டிகள்)
20 அணிகளும் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படும். முந்தைய டி20 உலகக் கோப்பையில், 20 அணிகளும் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. 5 லீக்களில் ஒவ்வொன்றிலிருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 சுற்றுக்குத் தகுதி பெறும்.
சூப்பர் 10 (20 போட்டிகள்)
சூப்பர் 10 குழுச் சுற்றில், அணிகள் தலா 5 கொண்ட 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் ரவுண்ட்-ராபின் முறையில் நடைபெறும். ஒவ்வொரு சூப்பர் 10 குழுவின் வெற்றியாளர்களும் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள்.
ALSO READ: இந்திய அணியின் கேப்டனும் மாற்றம்.. நேரமும் மாற்றம்! ஏன் தெரியுமா..?
வெளியேற்றப் போட்டி (2 போட்டிகள்)
அரையிறுதிப் போட்டிகளுக்கான மீதமுள்ள 2 இடங்கள், ஒரு புதிய ‘வெளியேற்றச் சுற்று’ (Eliminater Round) மூலம் தீர்மானிக்கப்படும். இதில், ஒவ்வொரு சூப்பர் 10 குழுவிலும் இரண்டாம் இடம் பிடித்த அணிகள், மற்ற குழுவில் 3ம் இடம் பிடித்த அணிகளை எதிர்கொள்ளும்.
தகுதிச்சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கான அணியை நிறைவு செய்யும். அதேசமயம் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் தற்போதுள்ள வடிவத்தின்படியே நடைபெறும்.