AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

England Test Team Coach: விலகிய மெக்கல்லம்.. இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?

Rahul Dravid Test Coach Of England: ராகுல் டிராவிட் இந்தியாவை 2024 டி20 உலகக் கோப்பை பட்டத்திற்கும், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் அழைத்து சென்றார். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், தற்போது முழுநேரப் பயிற்சியாளர் பணியை மேற்கொள்ள டிராவிடிற்கு விருப்பமில்லை என்று தெரிகிறது.

England Test Team Coach: விலகிய மெக்கல்லம்.. இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?
ராகுல் டிராவிட்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Jul 2026 15:46 PM IST

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பிரண்டன் மெக்கல்லம் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். மெக்கல்லமின் விலகலுக்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் (England Cricket Team) அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்பதில் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. தகவல்களின்படி, முன்னாள் இந்தியப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் (Rahul Dravid) இந்தப் பதவிக்கான போட்டியாளர்களில் முக்கியமான ஒருவராக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், எந்த அளவிற்கு இது உண்மை, ராகுல் டிராவிட்டிற்கு ஏற்று கொள்வாரா என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: முதலிடத்தில் இங்கிலாந்து.. முடிந்த இந்தியாவின் ஆதிக்கம்.. ஐசிசி டி20 தரவரிசை அப்டேட்!

பயிற்சியாளர் போட்டியில் யார் யார்?

பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் டாசன் ஆகியோரை உள்ளடக்கிய சாத்தியமான வேட்பாளர்களில் டிராவிட்டும் ஒருவர். நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த தொடரில் இங்கிலாந்து 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டெஸ்ட் பயிற்சியாளராக மெக்கல்லமின் நான்காண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. வருகின்ற 2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆஷஸ் தொடருக்கு முன்பு ஒரு மாற்றத்தைச் செய்வதற்கு இதுவே சரியான நேரம் என்று கருதி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) இந்த முடிவை எடுத்தது. இருப்பினும், மெக்கல்லம் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச அணிகளின் பயிற்சியாளராகத் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் டிராவிட்டின் பயிற்சிகாலம்:

ராகுல் டிராவிட் இந்தியாவை 2024 டி20 உலகக் கோப்பை பட்டத்திற்கும், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் அழைத்து சென்றார். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், தற்போது முழுநேரப் பயிற்சியாளர் பணியை மேற்கொள்ள டிராவிடிற்கு விருப்பமில்லை என்று தெரிகிறது. அந்த அறிக்கையின்படி, டிராவிடிற்கு முழுநேரப் பயிற்சியாளர் பணியை மேற்கொள்ள விருப்பமில்லை, ஆனால் இங்கிலாந்தின் டெஸ்ட் பயிற்சியாளர் பதவி, வீட்டில் அதிக நேரம் செலவிடவும், அவருக்குப் பிடித்தமான இந்த ஆட்ட வடிவத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.

ALSO READ: கெத்து காட்டும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.. சாதனை படைத்த யாஸ்திகா பாட்டியா!

ராகுல் டிராவிட் மட்டுமின்றி, இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்கார, இங்கிலாந்து லயன்ஸ் பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

Follow Us