AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“விஜய் அங்கிள்” முதல்வரை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்.. தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட் விடுத்து ஆவேச பேச்சு!

DMK Leader M. K. Stalin : கோவையில் நடந்த பாராட்டு விழாவில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யை அங்கிள் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டு விமர்சித்தார். அவர் பேசியதை விரிவாக பார்க்கலாம் .

“விஜய் அங்கிள்” முதல்வரை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்.. தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட் விடுத்து ஆவேச பேச்சு!
முதல்வர் விஜய் - மு.க.ஸ்டாலின்
Sekaran S
Sekaran S | Updated On: 04 Nov 2026 21:53 PM IST

கோவையில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் சார்பில் இன்று புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், மு. க. ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: பெரியார் அறிவுலகத்தை ஜோதிடர் குறித்த நாளில் முதல்வர் விஜய் திறந்து வைத்துள்ளார். முதல்வர் என்ன உடை அணிய வேண்டும், அலுவலகத்திற்கு எப்போது செல்ல வேண்டும், எங்கு அமர வேண்டும் என்பதை கூட ஜோதிடர் ஆலோசனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கும் நிலை உள்ளது. கோட் சூட் போடுகிறார். ஜோதிடர் கூறியபடி பரிகார பூஜை நடத்துகிறார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகம் செல்கிறார் விஜய் அங்கிள். இது சினிமா சூட்டிங் கிடையாது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

பத்திரிக்கையாளர்கலை பார்த்து பயந்து ஓடும் முதல்வர்

பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர் கொள்ளாமல் முதல்வர் தவிர்த்து வருகிறார். பத்திரிக்கையாளர்களை பார்த்து பயந்து ஓடுகிறார் விஜய் அங்கிள். முக்கியமான பிரச்சினைகளுக்கு உடனடியாக விளக்கம் அளிப்பது கிடையாது. இடைத்தேர்தல் போன்ற அரசியல் சூழ்நிலைகள் வரும்போதுதான் பொதுக் கூட்டங்களில் முதல்வர் பேச்சை கேட்க முடிகிறது. தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி வருகையின் போது மின்தடை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 3 நாள் காவல் நிறைவு.. சிறையில் போலீசார் துன்புறுத்தினரா.. நீதிபதியிடம் அன்பில் மகேஷ் அளித்த பதில்!

கொலை நகரமாக மாறும் கோவை மாநகரம்

இந்த சம்பவத்திற்கு பொறியாளர் ஒருவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே, மின் விநியோகத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூரில் மட்டும் 10 கொலைகள் நிகழ்ந்துள்ளன. கோவை கொலை நகரமாக மாறி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிலர் போதை பொருள் விவகாரங்களில் சிக்குவதாகவும், மெத்தம் பெட்டமைன் வைத்திருந்ததாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து முதல்வர் உரிய விளக்கம் அளிக்கவில்லை.

தவெகவில் பெண்கள் குற்றச்சாட்டை கையாள தனிப்பிரிவு தேவை

தமிழகத்தில் சிறுமிகள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்கள் அதிகரித்து வருகிறது. தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை கையாளுவதற்கு தனிப்பிரிவு உருவாக்க வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக திமுகவினரின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை பிடிப்பதில் மட்டுமில்லாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கண்காணிப்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தவெகவின் தற்குறி நிர்வாகமே வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.. குதிரை பேர குற்றச்சாட்டில் நீலி கண்ணீர் வடிக்க வெட்கமா இல்லையா.. பொங்கிய டிடிவி தினகரன்!

Follow Us