AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு விவகாரம்.. உயர்நீதி மன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வைத்த செக்!

Chidambaram Natarajar Temple Administrative Committee : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நிர்வாக குழு அமைத்து உத்தரவி பிறப்பித்திருந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்த முழு விவரத்தை விரிவாக பார்க்கலாம் .

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு விவகாரம்.. உயர்நீதி மன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வைத்த செக்!
சிதம்பரம் நடராஜர் கோவில்- உச்சநீதிமன்றம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 04 Nov 2026 20:02 PM IST

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபை மீது ஏறி நின்று தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்தனர். அத்துடன் தமிழக அரசின் அரசாணையே ஆதரித்தும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை பொது தீட்சிதர்களிடம் ஒப்படைத்து கடந்த 2014- ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த பிறகு கோவில் முறையாக நிர்வகிக்கப்படவில்லை. எனவே, கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் பாரதிதாசன், சுரேஷ்குமார் ஆகியோரை நியமிக்கிறோம் என்று தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோவில் தீட்சிதர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிதம்பரம் கோவில் நிர்வாக குழு செயல்பட இடைக்கால தடை

இதனால், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நிர்வாக குழு செயல்படுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது., முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பாரதிதாசன் தலைவராகவும், சுரேஷ்குமார் துணைத் தலைவராகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் அலுவலர் சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த கோவிலில் பொது தீட்சிதர்கள் மேற்கொண்ட தொடர் கட்டுமானங்களால் புராதன கட்டிடங்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 3 நாள் காவல் நிறைவு.. சிறையில் போலீசார் துன்புறுத்தினரா.. நீதிபதியிடம் அன்பில் மகேஷ் அளித்த பதில்!

தேவையில்லாத கட்டடங்களை இடித்து அகற்றுக

இதன் காரணமாக கோவில் புராதான கட்டிடங்களுக்கு இடையூறாக அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள தேவையில்லாத கட்டிடங்களை இடித்து அகற்றுவது தொடர்பாக தமிழக புராதான சின்ன ஆணையத்துடன் ஆலோசித்து நீதிபதிகள் தலைமையிலான நிர்வாக குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அத்துடன், இந்த குழு ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்களை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் சொத்துக்களை கணக்கெடுத்து, மாயமான மதிப்புமிக்க கோவிலுக்கு சொந்தமான பொருட்களை மீட்கவும், கோவில் சொத்துகளின் வாடகை குத்தகை பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரபுபடி குடமுழுக்கு நடத்த வேண்டும்

அவற்றுக்கு முறையான கணக்குகளை பராமரித்து, கோவில் வருமானத்தை பெருக்க நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக கோவிலுக்கு வந்த வருமானம் குறித்த முழு கணக்கை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வாகிக்காதது வேதனை அளிக்கிறது. புராதன கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல், கோவில் திருப்பணிகளை மேற்கொண்டு மத சடங்குகள், மரபுகள் படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தவெகவின் தற்குறி நிர்வாகமே வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.. குதிரை பேர குற்றச்சாட்டில் நீலி கண்ணீர் வடிக்க வெட்கமா இல்லையா.. பொங்கிய டிடிவி தினகரன்!

Follow Us