AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பட்டா மாற்றத்துக்கு ரூ.1.5 லட்சம் லஞ்சம்.. நீலகிரியில் பெண் விஏஓ அதிரடி கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை!

Nilgiris Female VAO Arrested : நீலகிரி மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ. 1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பட்டா மாற்றத்துக்கு ரூ.1.5 லட்சம் லஞ்சம்.. நீலகிரியில் பெண் விஏஓ அதிரடி கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை!
கைதான விஏஓ உமா.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 04 Nov 2026 19:07 PM IST

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள குந்தா வட்டத்துக்கு உள்பட்ட எடக்காடு நடுஹட்டி பகுதியில் வசித்து வருபவர் வசந்த். இவர், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தான செட்டில்மெண்ட் வாங்கிய நிலையில் பட்டா பெயர் மாற்றத்திற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக, பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவை நேரில் சந்தித்து பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ. 1.5 லட்சம் தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா கேட்டதாக தெரிகிறது. இந்த தொகையை கேட்டு அதிர்ச்சி அடைந்த வசந்த் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு காவல் நிலையத்தில் புகார்

உடனே, பேரம் பேசிய கிராம நிர்வாக அலுவலர் இறுதியாக 1.3 லட்சம் வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர் வசந்த் இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை வசந்த இடம் கொடுத்து, விஏஓ விடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி, பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்த விஏஓ உமா பிரியாவிடம் கொடுப்பதற்காக வசந்த் சென்றார்.

மேலும் படிக்க: 450 டன் வெங்காயம் வீண்! விலையேற்றதால் மக்கள் கண்ணீர்.. கவலையின்றி இடைத்தேர்தல் பணியில் 24-ஆம் புலிகேசி.. உதயநிதி காட்டம்!

லஞ்ச பணத்தை பெற்ற தனியார் வங்கி ஊழியர்

அப்போது, தான் பணி சம்பந்தமாக பிஸியாக இருப்பதால், இந்த பணத்தை மஞ்சூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படி, மஞ்சூர் பகுதிக்கு சென்ற வசந்த் அங்கு தனியார் வங்கி ஊழியரிடம் அந்த பணத்தை வசந்த் கொடுத்தார். இதனை, அங்கு மறைந்திருந்த கண்காணித்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சென்று தனியார் வங்கி ஊழியரை கைது செய்தனர். தொடர்ந்து, பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பெண் விஏஓ உள்பட இருவர் அதிரடி கைது

அவர்களிடம் இருந்த லஞ்ச பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா மற்றும் அவருக்கு உடனடியாக இருந்ததாக தனியார் வங்கி ஊழியர் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நீலகிரியில் பெண் விஏஓ கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: இலங்கைக்கு கடத்தல் முயற்சி! 1.9 கோடி ஹஷிஷ் பறிமுதல்.. கஞ்சாவை விட பல மடங்கு சர்வதேச மதிப்பு.. ராமநாதபுரத்தில் போலீசார் அதிரடி!

Follow Us