AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: பந்துவீச்சில் காயத்தால் சிக்கல்.. தோல்விக்குப் பிறகு இந்திய அணியில் 2 மாற்றங்கள்..!

IND vs ENG ODI Series: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது வருண் சக்கரவர்த்திக்கு திடீரென இடது தொடைப் பின்புறத்தில் அசௌகரியம் ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனையில், அவருக்கு கிரேடு 2 தொடைப் பின்புறக் காயம் இருப்பது தெரியவந்தது.

Team India: பந்துவீச்சில் காயத்தால் சிக்கல்.. தோல்விக்குப் பிறகு இந்திய அணியில் 2 மாற்றங்கள்..!
ஹர்சித் ராணா - வருண் சக்கரவர்த்தி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Jul 2026 16:41 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team), தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக ஜிம்பாப்வேக்கு பயணம் மேற்கொள்ளும். பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்ஷித் ராணா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் இந்த 2 தொடர்களிலிருந்தும் விலக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தற்போது இந்த இரு வீரர்களுக்கும் மாற்று வீரர்களை அறிவித்துள்ளது.

ALSO READ: இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் எப்போது..? முழு விவரம் இதோ!

இருப்பினும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்சித் ராணாவுக்குப் பதிலாக எந்தவொரு மாற்று வீரர்களையும் பிசிசிஐ நியமிக்கவில்லை. மாறாக, இங்கிலாந்துக்கு எதிரான மோசமான டி20 தொடர் தோல்வியில் பங்கேற்ற அதே வீரர்களையே தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில், ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு மாற்றாக லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டிரென்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது, ​​ஹர்ஷித் ராணா தனது வலது தொடைப் பின்பகுதியில் திடீரென அசௌகரியம் ஏற்பட்டதாகக் கூறினார். ஸ்கேன் பரிசோதனையில், ராணாவுக்கு கிரேடு 1 தொடைப் பின்பகுதி காயம் இருப்பது தெரியவந்தது. இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இருந்து ஹர்சித் ராணா விலக்கப்பட்டுள்ளார். மேலும், மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அவர் பிசிசிஐ-யின் சிறப்பு மையத்திற்கு (CoE) செல்வார்.

வருண் சக்கரவர்த்தியும் விலகல்:

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது வருண் சக்கரவர்த்திக்கு திடீரென இடது தொடைப் பின்புறத்தில் அசௌகரியம் ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனையில், அவருக்கு கிரேடு 2 தொடைப் பின்புறக் காயம் இருப்பது தெரியவந்தது. நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில், ஜிம்பாப்வேக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடரிலிருந்து வருண் சக்கரவர்த்தி விலக்கப்பட்டுள்ளார். மேலதிக சிகிச்சைக்காக வருண் சக்கரவர்த்தி பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரியைத் தொடர்புகொள்வார்.

இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, பிரதீப், கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ரார், பிரின்ஸ் யாதவ்

ALSO READ: இங்கிலாந்து அணியை சுருட்டி சாதனை படைத்த இந்திய வீராங்கனை கிராந்தி கவுடு.. லார்ட்ஸ் மைதானத்தில் புதிய வரலாறு!!

ஜிம்பாப்வே டி20 தொடருக்கான அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, பிரின்ஸ் யாதவ், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்) மற்றும் ரவி பிஷ்னோய்

Follow Us