AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் எப்போது..? முழு விவரம் இதோ!

IND vs ENG ODI Series: ஒருநாள் தொடருக்காக இந்திய அணியும் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இந்த ஒருநாள் தொடருக்காகத் தயாராகத் தொடங்கியுள்ளனர். உண்மையில், காயம் காரணமாக விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை.

IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் எப்போது..? முழு விவரம் இதோ!
இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Jul 2026 08:00 AM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (IND vs ENG T20 Series) இடையே 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் அதாவது 2026 ஜூலை 11ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தொடரை இழந்துவிட்ட இந்திய அணி (Indian Cricket Team), அடுத்ததாக ஒருநாள் போட்டியில் வெற்றியுடன் தொடர முயற்சிக்கும். இதற்கிடையில், இங்கிலாந்து அணி தனது தோல்வியற்ற பயணத்தை ஒருநாள் போட்டியிலும் தொடர முனையும். அதன்படி, இந்த டி20 தொடருக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ALSO READ: வைபவ் சூர்யவன்ஷி – அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை… அப்படி என்ன பண்ணாங்க?

தீவிர பயிற்சி:

ஒருநாள் தொடருக்காக இந்திய அணியும் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இந்த ஒருநாள் தொடருக்காகத் தயாராகத் தொடங்கியுள்ளனர். உண்மையில், காயம் காரணமாக விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. ஆனால் இப்போது அவர் முழு உடற்தகுதியுடன் இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக விளையாடத் தயாராக உள்ளார். கோலியுடன், பும்ராவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறார். அதேநேரத்தில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தொடை தசைநாரில் காயம் அடைந்த ஹர்ஷித் ராணா, வருகின்ற 2026 ஜூலை 14-ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஒருநாள் தொடர் அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி: ஜூலை 14, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 3:30 மணிக்கு, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்.
  • இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜூலை 16, 2026 (வியாழக்கிழமை) மாலை 5:30 மணிக்கு, சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்.
  • மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜூலை 19, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 3:30 மணிக்கு, லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்.

ALSO READ: குறுக்கே வந்தது மழையல்ல! இது வேறு.. தாமதமான டாஸுக்கு காரணம் என்ன?

இரு அணிகளின் முழு விவரம்:

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரஷித் கிருஷ்ணா, அர்ஷதீப் சிங், குர்னூர் பிர்ரூர் சிங்.

இங்கிலாந்து அணி:

ஹாரி புரூக், ரேஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், சாம் கர்ரன், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், ஜோ ரூட், ஜோஷ் டாங்.

Follow Us