Team India: ஆடும் லெவனில் நீக்கம்.. டக் அவுட்டில் அழுத வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!
Vaibhav Sooryavanshi Crying Video: வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயது மற்றும் 99 நாட்களில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். 16 வயது மற்றும் 205 நாட்களில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்த சாதனையை முறியடித்து, சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான மிக இளம் வயது இந்தியர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.
ஐபிஎல் 2026 சீசனில் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்க்கான போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, இந்திய அணிக்காக (Indian Cricket Team) சர்வதேச கிரிக்கெட்டில் எப்போது அறிமுகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இறுதியாக, தனது 15 வயது மற்றும் 99 நாட்களில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார், ஆனால் தனது முதல் 3 போட்டிகளில் வெறும் 42 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதற்கிடையில், வைபவ் சூர்யவன்ஷி மனமுடைந்து காணப்படும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று அதாவது 2026 ஜூலை 11ம் தேதி நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டதால் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) அழுது கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ALSO READ: இந்திய அணியின் மோசமான தோல்வி பயணம்.. முக்கிய பயிற்சியாளரை தூக்கும் பிசிசிஐ..?
வைரலான அந்த வீடியோவில், வைபவ் சூர்யவன்ஷி ஒரு சேரில் அமர்ந்து மிகவும் சோகமாக இருந்தார். தொடர்ந்து, இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டதால் வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றமடைந்து அழுதுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக தனது நெற்றியில் இருந்து வியர்வையைத் துடைப்பது போல் நடித்தார். இருப்பினும், வைபவ் சூர்யவன்ஷியை அணியிலிருந்து நீக்கியது கவுதம் காம்பீர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் கடுமையான முடிவு என்று கூறப்படுகிறது. இருப்பினும், வைபவ் 3 போட்டிகளிலும் சொதப்பினார்.




அறிமுகமானதும் படைக்கப்பட்ட சாதனை:
வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயது மற்றும் 99 நாட்களில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். 16 வயது மற்றும் 205 நாட்களில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்த சாதனையை முறியடித்து, சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான மிக இளம் வயது இந்தியர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். துரதிர்ஷ்டவசமாக, இங்கிலாந்தில் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி மாயாஜாலம் பலிக்கவில்லை. வைபவ் சூர்யவன்ஷி தனது 3 இன்னிங்ஸ்களில் முறையே 14, 13, மற்றும் 15 ரன்களை மட்டுமே எடுத்தார்.
ALSO READ: பந்துவீச்சில் காயத்தால் சிக்கல்.. தோல்விக்குப் பிறகு இந்திய அணியில் 2 மாற்றங்கள்..!
வைபவ் சூர்யவன்ஷி அடுத்து எப்போது விளையாடுவார்?
இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முடிந்த பிறகு இந்திய டி20 அணி ஜிம்பாப்வேக்கு பயணம் மேற்கொள்ளும். வருகின்ற 2026 ஜூலை 23 முதல் 2026 ஜூலை 26 வரை ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவிற்கு இடையே 3 டி20 போட்டிகள் நடைபெறும். இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷியும் சேர்க்கப்பட்டுள்ளார்.