AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: 48 அணிகளுடன் தொடங்கி இப்போது 4 அணிகள் மட்டுமே.. அரையிறுதியில் மோதப்போவது யார்?

FIFA World Cup 2026 Semi Final: 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிக்கு பிரான்ஸ், இங்கிலாந்து, அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முன்னேறியுள்ளன. 2026 ஜூலை 12ம் தேதியான இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து, நார்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அர்ஜென்டினா, சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

FIFA World Cup 2026: 48 அணிகளுடன் தொடங்கி இப்போது 4 அணிகள் மட்டுமே.. அரையிறுதியில் மோதப்போவது யார்?
ஸ்பெயின் - பிரான்ஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Jul 2026 15:12 PM IST

48 அணிகளுடன் தொடங்கிய 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) பயணம் இன்று சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் 4 அணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. கடந்த 2022  பதிப்பின் இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்திய அர்ஜென்டினா (Argentina), தனது இரண்டாவது தொடர்ச்சியான பட்டத்தை வெல்லும் நோக்கில் உள்ளது. அதேநேரத்தில், காலிறுதிப் போட்டியில் மொராக்கோவை வீழ்த்திய பிரான்ஸும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 அணிகளில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினும் போட்டியில் உள்ளன. இரண்டு அரையிறுதிப் போட்டிகளுக்கான அட்டவணை மற்றும் அவை இந்தியாவில் தொடங்கும் நேரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பணமோசடி குற்றச்சாட்டு! அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு தடையா?

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிக்கு பிரான்ஸ், இங்கிலாந்து, அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முன்னேறியுள்ளன. 2026 ஜூலை 12ம் தேதியான இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து, நார்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அர்ஜென்டினா, சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இருப்பினும், இந்த போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கோல் அடிக்கத் தவறினார். முன்னதாக, கடந்த 2026 ஜூலை 10ம் தேதி நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.  2026 ஜூலை 10ம் தேதியான நேற்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின், பெல்ஜியத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

முதல் அரையிறுதிப் போட்டி எப்போது, ​​யாருக்கு இடையே நடைபெறும்?

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே ஒருபுறம் கிலியன் எம்பாப்பேவும், மறுபுறம் லமின் யமலும் விளையாடுவார்கள். இந்தப் போட்டியானது வருகின்ற 2026 ஜூலை 15ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 12:30 மணிக்குத் தொடங்கும். ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த அரையிறுதிப் போட்டி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டனில் அமைந்துள்ள, டல்லாஸ் ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படும் ஏடி&டி ஸ்டேடியத்தில் நடைபெறும்.

FIFA உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதி எப்போது?

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 2வது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையே நடைபெறும். இந்தப் போட்டி வருகின்ற 2026 ஜூலை 16 ஆம் தேதி, கிழக்கு நேரப்படி மதியம் 12:30 மணிக்குத் தொடங்கும். இங்கிலாந்து – அர்ஜென்டினா இடையிலான இந்தப் போட்டி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் அமைந்துள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் மைதானத்தில் நடைபெறும். இது அட்லாண்டா மைதானம் என்றும் அழைக்கப்படுகிறது.

ALSO READ: சீறிப்பாய்ந்த இளம் சிங்கம்.. பறந்த கோல்கள்.. அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்போது நடைபெறும்?

2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி வருகின்ற 2026 ஜூலை 20ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, 2 அரையிறுதிப் போட்டிகளில் தோற்ற அணிகள், ஜூலை 19 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்குத் தொடங்கும் 3வது இடத்திற்கான போட்டியில் விளையாடும்.

Follow Us