FIFA World Cup 2026: பணமோசடி குற்றச்சாட்டு! அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு தடையா?
Argentina National Football Team: எஃப்.பி.ஐ தற்போது இந்த வழக்கு குறித்து ஒரு முதற்கட்ட விசாரணையை நடத்தி வருவதுடன், விளையாட்டுத் துறையின் முக்கியப் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், கால்பந்து அமைப்பு அல்லது அதன் அதிகாரிகள் மீது அதிகாரப்பூர்வமான குற்றவியல் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
தற்போது 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் (FIFA World Cup 2026) காலிறுதிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா கால்பந்து அணியின் (Argentina National Football Team) நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னணி புலனாய்வு அமைப்பான FBI, ‘அர்ஜென்டினா கால்பந்து சங்கம்’ (AFA) மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது. பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) தற்போது FBI மற்றும் அமெரிக்காவின் நீதித்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊழலின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு…
ALSO READ: ஃபிஃபா 2026-ல் அதிக கோல்கள் அடித்த 5 வீரர்கள்.. பட்டியலில் இடம்பெறாத ரொனால்டோ, நெய்மர்!
சட்டவிரோத பணப் பரிமாற்றம்:
அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் உலகளாவிய விளம்பர ஆதரவு மற்றும் ஒளிபரப்பு உரிமைகளுக்கான பணம், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள டூர்ப்ராட்என்டர் எல்எல்சி (TourProdEnter LLC) என்ற நிறுவனம் மூலம் மாற்றப்பட்டது. இந்நிறுவனம் 260 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தப் பரிவர்த்தனையைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. இந்த மொத்தத் தொகையில் சுமார் 57 மில்லியன் டாலர், எந்தவொரு தெளிவான நிதி அல்லது செயல்பாட்டுக் காரணமும் இன்றி பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக FBI சந்தேகிக்கிறது.




போலி நிறுவனங்கள்:
விசாரணையின் முதற்கட்ட அறிக்கைகளின்படி, அர்ஜென்டினாவில் அரசாங்கத்தின் சமூக நலத் திட்டங்களைச் சார்ந்து வாழும் மிகவும் ஏழ்மையான மக்களின் பெயர்களில் உள்ள போலி நிறுவனங்களின் கணக்குகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதாக சந்தேகிக்கப்படுகிறது. புலனாய்வு அமைப்புகளின் கூற்றுப்படி, இந்த சட்டவிரோத பண வழிகள் மூலம் கிடைத்த சுமார் 16.5 மில்லியன் டாலர், ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு நேரடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் அழுத்தமா?
ஏற்கனவே அர்ஜென்டினா அரசாங்கம் மற்றும் அதிபர் ஜேவியர் டெபாஸுடன் அரசியல் மோதலை எதிர்கொண்டு வரும் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் தலைவர் கிளாடியோ “சிக்கி” டாபியாவுக்கு, FBI விசாரணை ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அர்ஜென்டினாவில், இந்த அமைப்பால் நிதியுதவி செய்யப்படும் நிதி நிறுவனங்களிலும் உள்நாட்டு வரி மோசடி வழக்கின் கீழ் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
எஃப்.பி.ஐ தற்போது இந்த வழக்கு குறித்து ஒரு முதற்கட்ட விசாரணையை நடத்தி வருவதுடன், விளையாட்டுத் துறையின் முக்கியப் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், கால்பந்து அமைப்பு அல்லது அதன் அதிகாரிகள் மீது அதிகாரப்பூர்வமான குற்றவியல் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
ALSO READ: ஃபிஃபா சுவாரஸ்யம்.. பரிசுத்தொகையை பெண்கள் அணிக்கு பிரித்துக்கொடுக்கும் அமெரிக்கா.. ஏன் தெரியுமா?
அர்ஜென்டினா அணிக்கு தடையா?
அர்ஜென்டினா அணி தற்போது 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடி, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த FBI விசாரணையின் விளைவாக, அந்த அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கோ அல்லது வீரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கோ வாய்ப்பில்லை. இந்த விசாரணை, அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் (AFA) உயர் அதிகாரிகளுக்கும் நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் இடையிலான ஊழல் குறித்து மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விசாரணை அர்ஜென்டினா அணியையோ அல்லது உலகக் கோப்பை போட்டிகளையோ எந்த வகையிலும் பாதிக்காது.