பெண்களுக்கு எதிரான வன்முறை, அவர்களின் உடல் மற்றும் மனநலத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துவதுடன், Menopause காலத்தையும் முன்கூட்டியே ஏற்படுத்தக்கூடும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்பெயினின் கிரனாடா பல்கலைக்கழக மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறை மேற்கொண்ட ஆய்வில், வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு மாதவிடாய் நிறைவு சராசரியாக 20 மாதங்கள் முன்பே ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.