AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக அரசு கல்லூரிகளில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 எம்பிபிஎஸ் இடங்களைச் சேர்க்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக அரசு கல்லூரிகளில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Jul 2026 19:05 PM IST

சென்னை, ஜூலை 11 : நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 எம்பிபிஎஸ் இடங்களைச் சேர்க்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையம் அதிகாரப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. 2026 நடப்பு கல்வி ஆண்டிற்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு கல்லூரிகளில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள்

இந்த நிலையில் தேசிய மருத்துவத ஆணையம் மருத்துவக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே கூடுதல் இடங்களுக்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2026 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள 2 அரசு மருத்துவக் கல்லூரிகள் இந்த ஒப்புதலைப் பெற்றுள்ளன.

அதன் படி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 எம்பிபிஎஸ் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் கூடுதலாக 50 எம்பிபிஎஸ் இடங்களைச் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 2 கல்லூரிகளுடன் சேர்த்து தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்வித் துறையில் மொத்தம் 100 புதிய இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களுக்கு இது மிக சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த 100 கூடுதல் இடங்களும் நடப்பு கல்வி ஆண்டிலேயே சேர்க்கப்படுவதால், இது மருத்துவக் கலந்தாய்வு செயல்முறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 100 இடங்களிலிருந்து கூடுதல் இடங்கள், தமிழ்நாடு அரசின் 7.5 சதவிகித சிறப்பு உள் இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக ஒதுக்கப்படும். இது பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் கனவை நனவாக்குவதை எளிதாக்கும். கட்-ஆஃப் மதிப்பெண்களில் மாற்றம்: அரசு கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பொதுப் பிரிவு மற்றும் பிற பிரிவுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் சற்று குறைய வாய்ப்புள்ளது. கட்-ஆஃப் எல்லைக்கு அருகில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இது பெரும் நிம்மதியை அளிக்கும்.

கூடுதல் இடங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன், தேசிய மருத்துவ ஆணையத்தின்ய்வுக் குழு நாமக்கல் மற்றும் திருப்பூர் கல்லூரிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தியது. நவீன ஆய்வகங்கள், போதுமான ஆசிரியர்கள், மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் மாணவர் விடுதி வசதிகள் உள்ளிட்டவை சர்வதேசத் தரத்திற்கு இணங்க இருப்பதை உறுதிசெய்த பின்னரே, ஒவ்வொரு கல்லூரிக்கும் கூடுதலாக 50 இடங்களை ஒதுக்க ஆணையம் இறுதி ஒப்புதல் அளித்தது.

Follow Us