கோவை கல்லூரி விடுதி பாத்ரூமில் மாணவி சடலமாக மீட்பு – பெண்ணின் பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு!
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக விடுதி குளியல் அறையில், பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
கோவை, ஜூலை 11 : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த தர்னிகா , கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று காலை குளிப்பதற்காக மாணவி தர்னிகா விடுதி பாத்ருமிற்கு சென்று உள்ளார். அவர் வகுப்பறைக்கு வந்துவிடுவார் என நினைத்து கொண்டு உடன் இருந்த மாணவிகள் வகுப்புக்கு சென்றனர்.
கோவை கல்லூரி விடுதி பாத்ரூமில் மாணவி சடலமாக மீட்பு
தர்னிகா வகுப்பிற்கு வராத நிலையில் பிற்பகல் கல்லூரி விடுதிக்கு சக மாணவிகள் வந்து உள்ளனர். விடுதியில் பாத்ரூம் பூட்டிய நிலையில் இருந்தால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மாணவி பாத்ரூமில் பக்கெட்டில் கவிழ்ந்த படி கிடந்து உள்ளார். இதனை அடுத்து உடனடியாக மாணவியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்திய நிலையில் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மாணவி கொண்டு சொல்லப்பட்டார். அங்கு மாணவியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
இதனை அடுத்து பல்கலை கழக நிர்வாகத்தின் சார்பில் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விக்கிரவாண்டியில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். காலை 6.30 மணிக்கு குளிக்க போனவர் பிற்பகல் 1.30 வரை வரவில்லை என விடுதியில் யாரும் தேடவில்லை எனவும், தர்னிகாவிற்கு உடல் ரீதியான பாதிப்பு எதுவும் இல்லை எனவும், தினமும் இரவு வீட்டிற்கு போன் பண்ணுவார் எனவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
பாத்ரூமில் பக்கெட்டில் இறந்த நிலையில் சடலம் இருந்து உள்ளது எனவும், பொண்ணை ஏதோ செய்து விட்டனர் எனவும் மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். அடிக்கடி விடுதயில் தற்கொலை செய்து கொள்வதாக தர்னிகா வீட்டிற்கு போன் செய்த போது கூறி இருக்கின்றார் எனவும், ஆனால் தற்கொலை செய்து கொள்ள கூடிய அளவிற்கு தர்னிகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்தனர்.
மகளின் உடலை பிரேத பரிசோதனை கூடத்தில் பார்த்த போது, தர்னிகாவின் உதடு வீங்கி இருந்தது எனவும், கண்ணத்தில் கருப்பாக ஏதோ இருக்கின்றது எனவும் எதையோ மறைக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினர். இப்போது வலிப்பு வந்து இருக்கலாம் என்றெல்லாம் சொல்கின்றனர் எனவும், ஆனால் இது வரை தங்கள் மகளுக்கு அது போன்ற பிரச்சினை எதுவுமே இல்லை எனவும், மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் உயிரிழந்த மாணவி தர்னிகாவின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்..
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக விடுதி குளியல் அறையில், பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் வாலிக்குள் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியையும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பெற்றோரின் குமுறலையும் ஏற்படுத்தி உள்ளது.