AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹார்ட் பீட் சீசன் 3 சீரிஸ் ரசிகர்களே ரெடியா.. ரிலீஸ் தேதியுடன் வெளியான புரோமோ!

Heart Beat Season 3 Promo: தமிழில் சீரியல் ரசிகர்கள் இருப்பதுபோலவே, சீரிஸ் பார்க்கும் ரசிகர்களும் அதில் சீரிஸ் பார்க்கும் ரசிகர்களும் அதிகம். அந்த விதத்தில் தமிழில் ஓடிடியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவந்த சீரிஸ் தான் ஹார்ட் பீட். இந்த வெப் தொடரின் சீசன் 3 உருவாகியிருக்கும் நிலையில், ரிலீஸ் தேதியுடன் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஹார்ட் பீட் சீசன் 3 சீரிஸ் ரசிகர்களே ரெடியா.. ரிலீஸ் தேதியுடன் வெளியான புரோமோ!
ஹார்ட் பீட் சீசன் 3 ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Jul 2026 15:58 PM IST

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் மிகவும் பிரபலம். அந்த சீரியல்களை அந்தந்த சேனல்கள் வைத்திருக்கும் ஓடிடி தளங்களில் (OTT Platform) ஒளிபரப்பாகிவரும். அந்த விதத்தில் தமிழில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமா வெப் தொடர்கள் (Web Series) இருந்துவருகிறது. அதில் மிகவும் பிரபலமான வெப் சீரிஸ் தான் ஹார்ட் பீட் (Heart Beat Web Series). இந்த தொடரானது கடந்த 2024ம் ஆண்டு முதல் வெளியாக தொடங்கிய நிலையில், இதுவரை இரு சீசன்கள் வெளியாகியுள்ளது, மொத்தமாக கிட்டத்தட்ட 200 எபிசோடுகள் வெளியாகியுள்ளது. இந்த் வெப் தொடருக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கும் நிலையில், தற்போது ஹார்ட் பீட் சீசன் 3 (Heart Beat Season 3) உருவாகியுள்ளது.

இதில் நடிகை தீபா பாலு (Deepa balu), அனுமோல் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். இதன் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்த நிலையில், நடிகை தீபிகா பாலு இதிலிருந்து ஏற்கனவே வெளியீறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வருத்தத்தில் ரசிகர்கள் இருக்க, தற்போது ஹார்ட் பீட் சீசன் 3 நிகழ்ச்சியில் ரிலீஸ் தேதி புரோமோ வீடியோவுடன் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகர்… வைரலாகும் வீடியோ!

ஹார்ட் பீட் சீசன் 3 நிகழ்ச்சியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு புரோமோ வீடியோ குறித்த எக்ஸ் பதிவு:

ஹார்ட் பீட் சீசன் 3 புரோமோ :

இந்த புரோமோவில் டாக்டர் ரீனா (தீபா பாலு) மற்றும் அவரின் தந்தையும் வேறொரு மாநிலத்தில் இருக்கும் மருத்துவமனையில் வேலைபார்ப்பது போல காட்டப்பட்டுள்ளது. தனது மகளை நினைத்து, ஆர்.கே. மருத்துவமனையில் ரதி இருப்பதுபோல காட்டப்பட்டுள்ளது. இந்த சீசன் 3 தொடர்களில் எமோஷனல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் தற்போது ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்ட் பீட் சீசன் 3 ரிலீஸ் தேதி:

இந்த ஹார்ட் பீட் சீசன் 3 நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி முதல் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த தொடரானது வெளியாகவும் நிலையில், சீசன் 3-யிலும் கிட்டத்தட்ட 100 எபிசோடுகள் இருக்கிறதாம்.

இதையும் படிங்க: புராண காவியம்.. ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

இந்த வெப் தொடரானது மருத்துவம், காதல் மற்றும் எமோஷனல் போன்ற கதையில் உருவாக்கப்பட்டுவருகிறது. இதில் நடிகர்கள் தீபா பாலு மற்றும் அனுமோல் என இருவரும் லீட் வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த ஹார்ட் பீட் சீசன் 3 விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

Follow Us