அனைவரும் எதிர்பார்த்த ஹார்ட் பீட் சீசன் 3 ரிலீஸ் எப்போது? – வெளியான அறிவிப்பு இதோ!
Heart Beat Season 3 Jio Hotstar Release Date: தமிழ் சின்னத்திரை மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வெப் தொடராக இருந்துவருவது ஹார்ட் பீட். இந்த வெப் தொடரானது சீசன் 2 முடிந்து சீசன் 3 ஷூட்டிங் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் தற்போது ஹார்ட் பீட் சீசன் 3 தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காலக்கட்டத்தில் தொலைக்காட்சிகளில் (TV Series) மக்கள் தொடர்களை பார்த்து ரசித்துவந்தனர். தற்போது அதே தொலைக்காட்சியானது ஓடிடி தளங்களிலும் (OTT Platform) வெளியாகிவருகிறது. நமக்கு பார்க்கவேண்டும் என்ற நேரத்தில் ஓடிடியில் சென்று இந்த தொடர்களை பார்த்துக்கொள்ளலாம். அந்த வகையில், தமிழ் சின்னத்திரை மற்றும் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரிஸில் ஒன்றுதான் ஹார்ட் பீட் (Heart Beat). இந்த வலைத் தொடரானது கடந்த 2024ம் ஆண்டு முதல் தொடங்கிய நிலையில், இதுவரை மொத்தமாக 200 எபிசோடுகள் வெளியாகியிருக்கிறது. இந்த வரிசையில், தற்போது சீசன் 3 தயாராகியுள்ளது. இதன் ஷூட்டிங் முழுமையாக முடிந்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகிவந்தது.
தற்போது இதன் ரிலீஸ் தேதி குறித்து ஓடிடி பக்கம் அறிவித்துள்ளது. ஹார்ட் பீட் சீசன் 3 வெப் சீரிஸ் (Heart Beat Season 3) வரும் 2026ம் ஆண்டு ஜூலை 30ம் தேதியில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் (Jio Hotstar OTT) வெளியாகாவுள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் நானியின் தி பாரடைஸ் படம் – வைரலாகும் முக்கிய தகவல்
ஹார்ட் பீட் சீசன் 3 வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
One world became two. But the heartbeat remains one. ❤️
Hotstar Specials #HeartBeatSeason3 streaming from July 30 only on #JioHotstar #HBS3 #HBS3OnJHS #HeartBeatS3OnJioHotstar #HeartBeat3OnJioHotstar #HeartBeat3StreamingFromJuly30 #HeartBeatS3FirstLook #JioHotstarTamil… pic.twitter.com/RQFWVdi5uP
— JioHotstar Tamil (@JioHotstartam) July 1, 2026
ஹார்ட் பீட் சீரிஸிலிருந்து வெளியேறிய முக்கிய நடிகை:
இந்த ஹார்ட் பீட் வெப் தொடர்நது கடந்த 2024ம் ஆண்டில் தொடங்கிய நிலையில், 2 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 200 எபிசோடுகள் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் தீபா பாலு, அனுமோல், ஷாருகேஷ் மற்றும் யோகலட்சுமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இரு சீசன்களாக சிறப்பாக வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், சீசன் 3 தற்போது தயாராகியுள்ளது. இதன் ஷூட்டிங் எல்லாம் முடிந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 30ம் தேதியில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் ஜன நாயகன் சென்சார் பிரச்சனை… ரிலீஸ் எப்போது?
இந்த தொடரில் ரீனா என்ற வேடத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தீபா பாலு. இவர் இந்த சீரிஸின் மிக முக்கிய நடிகையாவார். தற்போது அவர் இந்த் வெப் சீரிஸிலிருந்து விலகிவிட்டாராம். இது குறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



