AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பூஜையுடன் தொடங்கியது துருவ் விக்ரமின் புதுப் படம் – வைரலாகும் போட்டோஸ்

Dhruv Vikram's 4th film Kick Stars With Pooja | தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.

பூஜையுடன் தொடங்கியது துருவ் விக்ரமின் புதுப் படம் – வைரலாகும் போட்டோஸ்
துருவ் விக்ரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jul 2026 13:44 PM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் இவரது படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் தான் அவரது மகன் துருவ் விக்ரமும் தொடர்ந்து படங்களில் நடித்து தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நாயகனாக வலம் வருகிறார். மேலும் இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் ரசிகர்களிடையே ஈர்ப்பு இல்லை என்றாலும் தற்போது துருவ் விக்ரமை கொண்டாட ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளியான பைசன் காலமாடன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான பைசன் காலமாடன் ஒரு ஸ்போர்ஸ் ட்ராமா பாணியில் வெளியான படம் ஆகும். உண்மைக் கதையை மையமாக வைத்து வெளியானதால் இந்தப் படத்திற்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள 4-வது படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

பூஜையுடன் தொடங்கியது துருவ் விக்ரமின் புதுப் படம்:

அதன்படி அறிமுக இயக்குநர் கரன் அரவிந்த் குமார் எழுதி இயக்கும் படம் துருவ் விக்ரம் 4. நடிகர் துருவ் விக்ரமின் 4-வது படமாக உருவாக உள்ள இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் இதுவரை படக்குழு அதனை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று துருவ் விக்ரமின் 4-வது படத்தின் பூஜை நடைப்பெற்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தமிழ் டப்பிங்ல இருக்க இந்த அமெரிக்கன் படத்தை மிஸ் செய்யாதீர்கள்… வாய்ஸ் மெயில் ஃபார் இசபெல்லா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

மைத்திரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… முடிவுக்கு வரும் ஜன நாயகன் சென்சார் பிரச்சனை… ரிலீஸ் எப்போது?

Follow Us