AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கண்களை விட்டு வந்திருக்கிறேன்… – மறைந்த கே.பாக்யராஜின் கையெழுத்துடன் வெளியான கடிதத்தால் சர்ச்சை

மறைந்த நடிகர், இயக்குநர் கே.பாக்யராஜின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அவர் எழுதியது போன்ற கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அவர் மறைந்த பிறகு அவரது பெயரில் கையெழுத்துடன் கடிதம் வெளியாகியிருப்பது ஒரு பக்கம் ரசிகர்களிடயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொரு பக்கம் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

கண்களை விட்டு வந்திருக்கிறேன்… – மறைந்த கே.பாக்யராஜின் கையெழுத்துடன் வெளியான கடிதத்தால் சர்ச்சை
கே.பாக்யராஜ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Jun 2026 20:35 PM IST

இயக்குநர், கதாசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட கே.பாக்யராஜ் . கடந்த ஜூன் 27, 2026 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்ததது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள சிக்கலை அனைவரும் ரசிக்கும்படி திரையில் காட்டியவர் கே.பாக்யராஜ். குறிப்பாக இந்தியாவின் சிறந்த திரைக்கதாசிரியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இவரது படங்கள் நேரடியாக தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிறகு அவரது பெயரில் அவரது கையெழுத்துடன் கூடிய கடிதம் வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மறைந்த கே.பாக்யராஜின் கையெழுத்துடன் வெளியான கடிதத்தால் சர்ச்சை

மறைந்த நடிகர், இயக்குநர் கே.பாக்யராஜின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அவர் எழுதியது போன்ற கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், “சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது – அன்புடன் உங்கள் K பாக்யராஜ். நான் எழுதுன இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையோட பெரிய சந்தோஷமா மாத்துன என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும்,திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன்.

இதையும் படிக்க : Athrvaa: அந்த படத்தை நான் ரொம்பவே என்ஜாய் பண்ணி பண்ணேன்.. பார்ட் 2 லீட் கூட இருந்தது – அதர்வா ஓபன் டாக்!

அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன்.பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக! அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைதட்டல் ஆசிர்வாதமாக இருக்க விரும்புகிறேன். என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்.

பாக்யராஜின் பெயரில் வெளியான கடிதம்

 

நானும் என் விழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். “இருக்கிறேன்” -பார்த்தீர்களா? இன்னும்….. கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் பார்வையாய்! வரும் போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரஹ பிரவேசம் செய்துவிடும். எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது. இருப்பேன்!
Thanks! நன்றி சொல்வது மனித இயல்பு! நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே. இனி நான்.. நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல வசனத்தில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : Aishwarya Lekshmi: அப்படி ஒருவருடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை.. திருமணம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி!

இந்த கடிதம் குறித்து பலர் நெகிழ்ச்சி தெரிவித்தாலும் சிலர், இறந்த பிறகு ஒருவரின் பெயர் மற்றும் கையெழுத்தை பயன்படுத்துவது என தவறானது என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர் இல்லாத போது அவர் சொல்லியதாக அவர் பெயரில் தெரிவிப்பது தவறு எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். இதனையடுத்து இந்த பதிவு ஒரு பக்கம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொரு பக்கம் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us