எது தர்மம்? திருச்சியில் தவெக சார்பில் போட்டியா? விளக்கமளித்த நடிகர் லாரன்ஸ்!
Raghava Lawrence stated he is not contesting the by-election | திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று நடிகருகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வெளிப்படையாக தற்போது தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் இருந்து மக்களிடையே பிரபலமாகி பிறகு அரசியலுக்கு வந்த தலைவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது நடிகர் தளபதி விஜயும் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் தளபதி விஜய் தன்னை சினிமாவில் உயர்த்திய மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் அதற்கு அதிகாரம் வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசியலில் களம் இறங்கினார். தொடர்ந்து தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக உள்ள கட்சிகளுக்கு எதிராக தனித்து நின்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இந்த 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆம் தளபதி விஜய் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றிப் பெற்று தமிழ் நாட்டின் முதலமைச்சராகினார்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் 2026-ல் நடிகர் தளபதி விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதன்படி பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றிப் பெற்ற நிலையில் தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அங்கு இடைதேர்தல் நடைபெறும். அந்த தேர்தலில் யார் யார் போட்டியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




எது தர்மம்? திருச்சியில் தவெக சார்பில் போட்டியா?
இந்த நிலையில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையில் முன்னதாக அரசியலுக்கு செல்ல தடை சொல்லி வந்த தனது தாய் தற்போது விஜயின் வெற்றிக்கு பிறகு ஒப்புக்கொண்டதாக வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ் மக்களாகி நீங்க சொல்லுங்க நான் அரசியலுக்கு வரவா வேண்டாமா என்று கேட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்திய ராகவா லாரன்ஸ் மக்களை தெரு நாய்கள் உடன் ஒப்பிடுவது போல ஒரு பேச்சை பேசி இருந்தார். அந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் கண்டனம் வழுத்தது. அதனைத் தொடர்ந்து தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப் பட்டது என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று புதிதாக ஒரு வீடியோ ஒன்றை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று கூறியதுடன் தான் திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் யாரை அந்த போட்டியில் நிற்கவைக்கிறாரோ அவர் நிச்சயமாக வெற்றிப் பெறுவார் என்றும் தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Suriya: சூர்யா அரசியல் வருகிறாரா..? அதிரடியாக நற்பணி மன்றம் கொடுத்த விளக்கம்!
இணையத்தில் வைரலாகும் ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பதிவு:
Do your duty. Don’t expect anything in return.
As announced earlier, here is my clarification regarding the Trichy election and my recent press meet.
Thank you all for your love and support 🙏🏼#serviceisgod pic.twitter.com/JlIlkxVKdr
— Raghava Lawrence (@offl_Lawrence) June 30, 2026
Also Read… கமெண்டில் ஜன நாயகன் அப்டேட்டை கேட்கும் ரசிகர்கள் – இயக்குநர் சிதம்பரம் ஓபன் டாக்