AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கமெண்டில் ஜன நாயகன் அப்டேட்டை கேட்கும் ரசிகர்கள் – இயக்குநர் சிதம்பரம் ஓபன் டாக்

Jana Nayagan Movie Update | தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகாமல் தள்ளிப்போகும் படம் ஜன நாயகன். இந்தப் படம் குறித்து இயக்குநர் சிதம்பரம் சமீபத்திய பேட்டியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கமெண்டில் ஜன நாயகன் அப்டேட்டை கேட்கும் ரசிகர்கள் – இயக்குநர் சிதம்பரம் ஓபன் டாக்
இயக்குநர் சிதம்பரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2026 16:43 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தொடர்ந்து 6 மாதங்களாக வெளியீட்டில் சிக்கலை சந்தித்து வருகிறது நடிகரும் முதலமைச்சருமான தளபதி விஜயின் நடிப்பில் வெளியான ஜன நாயகன் படம். இயக்குநர் எச்.வினோத் இந்த ஜன நாயகன் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் தான் நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் இறுதிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தேர்தலில் வென்று முதலமைச்சராக ஆவதற்கு முன்னதாகே இந்த அறிவிப்பை வெளிப்படையாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தளபதி விஜயின் ஃபேர்ஃபல் போல நடத்தியது படக்குழு. இந்தப் படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தப் படம் குறித்து இயக்குநர் சிதம்பரம் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அனைவரும் ஜன நாயகன் படத்திற்காகக் காத்திருக்கிறார்கள்:

அனைவரும் ஜன நாயகன் படத்திற்காகக் காத்திருக்கிறார்கள். பாலன் படம் குறித்து நான் எதைப் பதிவிட்டாலும், ஜன நாயகன் குறித்த தகவல்களைக் கேட்டு வரும் ரசிகர்களின் கருத்துகளே அதில் அதிகம் இடம்பெறுகின்றன. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருப்பதையும், அனைவரும் இதைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதையும் நான் அறிவேன். அதேவேளையில், என்றாவது ஒரு நாள் விஜய் சாரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்றும் நம்புகிறேன் என்றும் இயக்குநர் சிதம்பரம் பேசி இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அரசன் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி எப்போது இணைவார்? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் சிதம்பரத்தின் பேச்சு:

Also Read… ஐயா கருப்பனே வாருமையா.. பாடகர் மகாலிங்கத்திற்கு பல லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!

Follow Us