AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஷ்ணு விஷால் – அருண்ராஜ் காமராஜின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா?

Arunraj Kamaraj next is a boxing sports drama | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அருண் ராஜ் காமராஜ். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது.

விஷ்ணு விஷால் – அருண்ராஜ் காமராஜின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா?
அருண்ராஜ் காமராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jun 2026 18:25 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருகிறார் அருண்ராஜா காமராஜ். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி இருந்தாலும் அடுத்தடுத்து இவர் இயக்குநராக இயக்கிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கனா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் கிரிக்கெட்டை மையமயாக வைத்து ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான நெச்சுக்கு நீதி படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டும் இன்றி மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு திரைக்கதை எழுதும் பணிகளையும் பாடல்கள் எழுதுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அருண் ராஜா காமராஜ். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நபராக வலம் வரும் அருண் ராஜா காமராஜ் அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷால் வைத்து படத்தை இயக்க உள்ளார். அந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

பாக்ஸிக் படத்தை இயக்கும் அருண்ராஜா காமராஜ்:

விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் பேசும் போது, விளையாட்டு சார்ந்த உணர்வுகளைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால், நான் இதுவரை குத்துச்சண்டை போட்டிகளைத் தொலைக்காட்சியில் கூடப் பார்த்ததோ அல்லது அவற்றைப் பின்தொடர்ந்ததோ இல்லை. இருப்பினும், எனது அடுத்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டது. கதையைக் கேட்டபோது, ​​முதல் 20 நிமிடங்களிலேயே அந்த குத்துச்சண்டை சார்ந்த உணர்வு என்னுடன் ஒன்றிப்போனது.  அதனால், அந்தத் திரைக்கதையுடன் நான் எளிதாகவே ஈர்க்கப்பட்டேன்.

Also Read… ஜெயிலர் பட ஷூட்டிங்கில் வர்மன் & கேங்ஸ் டான்ஸை பார்த்து ரசிக்கும் ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Ravi Mohan: யாஷுடன் மோதும் ரவி மோகன்.. கராத்தே பாபு பட ரிலீஸ் எப்போது தெரியுமா?

Follow Us