எப்புட்றா இவகூட நாளு வருஷம் ரிலேஷன்ஷிப்ல இருந்த – வெளியானது லவ் ஓ லவ் படத்தின் ட்ரெய்லர்
Love Oh Love Movie Official Trailer | தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் பவிஷ் நாராயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் லவ் ஓ லவ். இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் தற்போது இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக வலம் வருபவர் நடிகர் பவிஷ் நாராயண். இவரது அம்மா வழி தாத்தா தான் இயக்குநர் கஸ்தூரி ராஜா. மேலும் இயக்குநர் செல்வராகவனின் தங்கை மற்றும் நடிகர் தனுஷின் அக்கா மகனாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகர் பவிஷ் நாராயண். இவர் முன்னதால நடிகர் தனுஷ் எழுதி இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாயகனாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பவிஷ் நாராயண் தற்போது நாயகனாக நடித்து உள்ள படம் லவ் ஓ லவ். ரொமண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் பவிஷ் நாராயண் ஜோடியாக நடிகை நாக துர்கா நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார், ரம்யா, அஸ்வத், சௌந்தர்யா மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




லவ் ஓ லவ் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட அனிருத் ரவிச்சந்தர்:
படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை தற்போது இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டுள்ளார். அந்த ட்ரெய்லரில் காதலிக்கும் ஆண் பெண் இருவரும் இடையே பிரச்சனை ஏற்பட்டு போலீசாக உள்ள செல்வராகனிடம் பஞ்சாயத்திற்கு வருகிறது. அந்த பஞ்சாயத்தின் முடிவில் என்ன ஆனது மேலும் காதல் என்பது ஆண்களுக்கு எப்படி பெண்களுக்கு எபப்டி என்பதை இந்தப் படம் காட்டி உள்ளதாக ட்ரெய்லரில் பார்க்கும் போது தெரிகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read…
அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy to unveil the trailer of #LoveOhLove. ❤️https://t.co/KDOd9qxzDk
Wishing the entire cast and crew all the very best 🎉#LoveOhLoveFromJuly10 in Theaters.
A @foxnmusic Musical 🎺@zinemaindia @creativeentoffl @dineshrajoffl @Pavishvofficial @nagadurgaoffl @alyekmaliya…
— Anirudh Ravichander (@anirudhofficial) June 26, 2026
Also Read… Kavin: தண்டட்டி பட இயக்குநரின் இயக்கத்தில் கவினுடன் இணைத்த சஞ்சனா.. டைட்டில் இதுவா?