AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யாவின் 47-வது படத்தில் நடிக்கும் பிரபல யூடியூபர்? வைரலாகும் வீடியோ

Suriya 47 Movie Update | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் சூர்யா 47. இந்தப் படத்தில் தமிழ் மொழியில் பிரபலமாக உள்ள யூடியூபர் நடித்து வருவதாக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் 47-வது படத்தில் நடிக்கும் பிரபல யூடியூபர்? வைரலாகும் வீடியோ
சூர்யா 47Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2026 16:30 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் தொடர்பன அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் வீடியோவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூர்யா 47. இந்தப் படத்தில் பிரபல யூடியூபர் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சூர்யாவின் 47-வது படத்தில் நடிக்கும் பிரபல யூடியூபர்?

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் நடைப்பெற்று வந்தது. இந்த கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதில் ரசிகர்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதைவிட அதிகமாக லுங்கி பாய்ஸ் என்ற யூடியூபில் ராஜ் பிரியன் மற்றும் அவரின் குழுவினரின் ரிவியூ வீடியோவைப் பார்க்க ஆவளுடன் இருந்தனர். கிரிக்கெட் மேட்ச் முடிந்ததும் அடுத்து இவர்களின் வீடியோவை தேடி வந்தவர்கள் பலர்.

இப்படி மக்களிடையே பிரபலமான ராஜ் பிரியன் தற்போது நடிகர் சூர்யாவின் 47-வது படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரை ராஜ் பிரியன் சந்தித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… “நான் தயாக போகிறேன்”… கருவுற்றதை உறுதிப்படுத்திய நடிகை சமந்தா!

இணையத்தில் வைரலாகும் சூர்யா 47 படப்பிடிப்பு வீடியோ:

Also Read… பேசில் ஜோசஃபின் அதிரடி படம் நிஜமாவே அதிரடியா இருக்கா? ஓடிடி விமர்சனம் இதோ

Follow Us