“நான் தயாக போகிறேன்”… கருவுற்றதை உறுதிப்படுத்திய நடிகை சமந்தா!
கடந்த சில நாட்களாகப் பரவி வரும் வதந்திகளை உறுதிப்படுத்தும் விதமாக, சமந்தா ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற 'மா இன்டி பங்காரம்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய சமந்தா, தான் விரைவில் தாயாகப் போவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
ஜூன் 24, 2026: கடந்த சில நாட்களாகப் பரவி வரும் வதந்திகளை உறுதிப்படுத்தும் விதமாக, சமந்தா ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய சமந்தா, தான் விரைவில் தாயாகப் போவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு, கடந்த சில நாட்களாக பரவி வந்த கர்ப்பம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தான் விரைவில் தாயாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தாயாக போகும் நடிகை சமந்தா:
அவர் நடித்துள்ள சமீபத்திய திரைப்படமான மா இண்டி பங்காரம் படத்தின் வெற்றி விழா ஜூன் 24-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சமந்தா, தாம் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தியதுடன், சில மாதங்கள் மகப்பேறு விடுப்பு எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ரசிகர்கள், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சமீப காலமாக ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சேலையில் தோன்றிய சமந்தா, வெற்றி விழாவில் டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார். அப்போது அவரது பேபி பம்ப் தென்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது. இருப்பினும், சமந்தாவோ அல்லது அவரது கணவர் ராஜ் நிடிமோருவோ இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதற்கிடையில், படக்குழு சிரஞ்சீவியை சந்தித்தபோது, “புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ள சமந்தா – ராஜ் நிடிமோரு தம்பதிக்கு வாழ்த்துகள்” என்று அவர் பதிவிட்டிருந்தார். இதனால் கர்ப்பம் குறித்த தகவல் மேலும் உறுதியானதாக பேசப்பட்டது.
ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சமந்தா:
இந்நிலையில், சமந்தா தாமே கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையில், ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ள இப்படம், வெளிநாடுகளிலும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டும் நிலையில் உள்ளது.
இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். சமந்தாவுடன் ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, மஞ்சுஷா, திகந்த், குல்ஷன் தேவையா, ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த், லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ராலாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சமந்தா, ராஜ் நிடிமோரு மற்றும் ஹிமாங்க் துவ்வூரு இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.