AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆசிய விளையாட்டு: வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் – ரூ.30 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர்

Asian Games 2026 : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல், ஆண்கள் அணி ஸ்குவாஷ் அரையிறுதியில் மலேசியாவிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோருக்கு முதல்வர் விஜய் ரூ.30 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு: வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் – ரூ.30 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர்
முதல்வர் விஜய் - வேலவன் செந்தில்குமார் - அபய் சிங்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Oct 2026 22:17 PM IST

சென்னை, அக்டோபர் 1 : ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் ஆடவர் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், பதக்கம் வென்ற ஸ்குவாஷ் அணியில் உள்ள தமிழக வீரர்கள் வேலவன் செந்தில்குமார், அபய் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஸ்குவாஷ் வீரர்களின் வெற்றியை பாராட்டும் வகையில் இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல், ஆண்கள் அணி ஸ்குவாஷ் அரையிறுதியில் மலேசியாவிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. முதல் ஆட்டத்தில் அபய் சிங், மலேசியாவின் இங் ஈயன் யோவிடம் தோல்வியடைந்தார். இரண்டாவது ஆட்டத்தில் வீர் சோட்ரானி, சஞ்சய் ஜீவாவை வீழ்த்தி சமநிலைக்குக் கொண்டு வந்தார். இதனையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் முதல் செட்டை 12-10 என வென்ற வேலவன் செந்தில்குமார், அடுத்த மூன்று செட்களையும் 6-11, 8-11, 9-11 என இழந்து அமீஷென்ராஜ் சந்திரனிடம் தோல்வியடைந்தார். இதனால் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. இதில் அபய் சிங் மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோர் தமிழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? வெளியான புதிய அறிவிப்பு

இந்த நிலையில், ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் ஆண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் அறிவிப்பு

 

மேலும் அவர்களது வெற்றியைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்கள் திறமை, விடாமுயற்சி மற்றும் குழு உணர்வுடன் களத்தில் சிறப்பாகச் செயல்பட்டு, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். ஸ்குவாஷ் வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோரது வெற்றி, இளம் தலைமுறையினர் விளையாட்டுத் துறையில் ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் ஈடுபட உத்வேகம் அளிக்கும். இவ்வீரர்கள் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று, சர்வதேச அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்! என அவரது பதிவில் தெரிவித்தார்.

இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு விளக்கம்!

தோல்வி ஏமாற்றம் அளித்தாலும், அபய் சிங்குக்கு இந்தத் தொடரில் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், இப்போது அணி பிரிவில் வெண்கலத்தையும் சேர்த்து நகோயாவில் இரண்டு பதக்கங்களுடன் அவர் நாடு திரும்பவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடவர் அணி ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் மலேசியாவும் பாகிஸ்தானும் தங்கப் பதக்கத்துக்காக மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Follow Us