“எளியவர்களை நிறுத்தி மன்னர்களை தோற்கடித்தோம்.. திமுகவின் கிளையாக மாறிவிட்ட அதிமுக.. முதல்வர் விஜய் காட்டம்..
சத்தியபாமா குறித்து பேசிய விஜய், “சட்டமன்ற உறுப்பினராக சத்தியபாமா இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரவில்லை. அவருடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் வந்தார். இதில் எந்தப் பேரமும் கிடையாது. சர்க்காரியா கமிஷனைப் பற்றி பேசினால் அதிமுகவிற்கு ஏன் கோபம் வர வேண்டும்? என
செப்டம்பர் 30, 2026: தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் இன்று தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக திமுகவின் கிளையாக செயல்படுகிறது என விமர்சனம் செய்தார். ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்த அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா என கேள்வி எழுப்பிய விஜய், கொங்கு மக்கள் எப்போதுமே உழைக்கும் மக்கள் எனக் குறிப்பிட்டார். எனவே, தாராபுரம் மக்கள் அனைவரும் வெற்றி வேட்பாளர் சத்தியபாமாவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் விஜய்:
தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்திருக்கிறதா என்பதை நிரூபிக்கும் ஒரு பலப்பரீட்சையாக இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது.
அதேபோல், திமுகவும் அதிமுகவும் சரிசமமாக இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்டி, அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் படிக்க: காங்கிரஸ்- திமுக கூட்டணி எதிர்காலத்தில் அமையுமா.. அமைச்சர் விஸ்வநாதன் கூறிய பகீர் வார்த்தை!
திமுகவுடன் அதிமுக மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிறது:
இந்தச் சூழலில் தாராபுரத்தில் மக்களிடையே பேசிய முதலமைச்சர் விஜய், “இன்னும் நாங்கள்தான் முதலமைச்சர், நாம்தான் அதிகாரத்தில் இருக்கிறோம் என சிலர் நினைக்கின்றனர். ஆட்சி மனப்பான்மை எனக்கு கிடையாது.
தீய சக்தி திமுகவுடன் அதிமுக மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிறது. தீய சக்தி திமுகவின் பினாமி போல் சுயநலமாக சுற்றுபவர்கள் நாம் கிடையாது. மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவோம். மக்களின் நன்றி கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளேன்.
கடவுள் நம்பிக்கை எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. கிருஷ்ண ஜெயந்திக்கும் சரி, கிறிஸ்துமஸுக்கும் சரி, பக்ரீதுக்கும் சரி, நாங்கள் வாழ்த்து சொல்வோம். மற்றவர்களைப் போல வெளிவேஷம் போட்டுக்கொண்டு, பம்மிக்கொண்டு திமுக போல் இருக்க மாட்டோம்” எனக் கூறினார்.
எளியவர்களை நிறுத்தி மன்னர்களை தோற்கடித்தது தான் தவெக:
மேலும் பேசிய விஜய், “அண்ணா காலத்தில் எளியவர்களை நிறுத்தி மன்னர்களை தோற்கடித்ததாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னது போலவே, எளியவர்களை நிறுத்தித்தான் மன்னர்களை தோற்கடித்தது தமிழக வெற்றிக் கழகம்.
கொளத்தூர் மக்கள் தன்னைத் தோற்கடித்ததற்கு கையெடுத்து கும்பிட்டு கோடான கோடி நன்றி என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். திமுக ஆட்சியில் நிறைய தவறுகள் நடந்திருக்கிறது. அதனால்தான் கொளத்தூரில் ஓட்டு போடவில்லை. இனி ஒவ்வொரு தேர்தலிலும் ஸ்டாலின் கோடான கோடி நன்றி என கூறிக்கொண்டேதான் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க: திமுகவினர் சினம் கொண்ட சிங்கமாக மாறுவர்.. எனது அரசியல் அனுபவம் கூட அந்த அமைச்சரின் வயது கிடையாது.. பி.கே. சேகர்பாபு கொந்தளிப்பு!
மு.க.ஸ்டாலின் அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார். நான் பாசமாகப் பேசுகிறேன். ஆபாச நதியையும், வன்ம நதியையும் வளர்த்து வந்திருக்கிறார் ஸ்டாலின். நீங்கள் பேசப் பேச நாங்கள் உயர்வோம். தரம் தாழ்த்திப் பேசப் பேச, தாழ்வுக்காக உயர்ந்துகொண்டே இருப்போம்” எனத் தெரிவித்தார்.
அதிமுக திமுகவின் கிளையாக மாறிவிட்டது:
தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவின் கிளையாக இருந்த ஒரு கட்சி தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது. அதுதான் அதிமுக. திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான். இருவருக்கும் ஒரே ஓனர்தான்.
யாரை எதிர்த்து எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினாரோ, ஜெயலலிதா அரசியல் செய்தாரோ, அவர்களை அவமானப்படுத்துவது போல் திமுகவுடன் அதிமுக சேர்ந்து செயல்படுகிறது” என விமர்சித்தார்.
சத்தியபாமாவுக்கு ஆதரவாக பேசிய முதல்வர்:
சத்தியபாமா குறித்து பேசிய விஜய், “சட்டமன்ற உறுப்பினராக சத்தியபாமா இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரவில்லை. அவருடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் வந்தார். இதில் எந்தப் பேரமும் கிடையாது. சர்க்காரியா கமிஷனைப் பற்றி பேசினால் அதிமுகவிற்கு ஏன் கோபம் வர வேண்டும்?
திமுகவுக்கு முட்டுக்கொடுக்கிறது அதிமுக. திமுகவை எதிர்ப்பது தமிழக வெற்றிக் கழகம் மட்டும்தான். தீய சக்தி திமுகவுக்கு ஓட்டு போடக்கூடாது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன்” என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.