AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காங்கிரஸ்- திமுக கூட்டணி எதிர்காலத்தில் அமையுமா.. அமைச்சர் விஸ்வநாதன் கூறிய பகீர் வார்த்தை!

Minister Viswanathan Regarding Congress DMK Alliance : காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி எதிர் காலத்தில் அமையுமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் பகீர் பதில் அளித்துள்ளார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

காங்கிரஸ்- திமுக கூட்டணி எதிர்காலத்தில் அமையுமா.. அமைச்சர் விஸ்வநாதன் கூறிய பகீர் வார்த்தை!
அமைச்சர் விஸ்வநாதன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Sep 2026 14:00 PM IST

காங்கிரஸ்- திமுக கூட்டணி எதிர்காலத்தில் அமைய வாய்ப்பே கிடையாது என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறினார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி மாபெரும் வெற்றியே பதிவு செய்யும். இந்த இடைத்தேர்தலில் போட்டி என்ற கேள்விக்கு இடமில்லை. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் தவெகவுக்கு கிளீன் ஸ்வீப் வெற்றி கிடைக்கும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி ஆட்சிக்கு மக்கள் தரும் அங்கீகாரமாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. தமிழகத்தில் ஏறத்தாழ சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்துள்ள கூட்டணி ஆட்சிக்கு மக்கள் நலத்திட்டங்களுக்காக, மக்கள் அளிக்கும் அங்கீகாரமாகவே இந்த தேர்தலை பார்க்கிறேன்.

எடப்பாடி தப்பித்து கொள்ள முயற்சி செய்கிறார்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தவெகவுக்கு சிறப்பான வெற்றி வாய்ப்பு உள்ளது. இதில், கவலைப்படுவதற்கு எதுவும் கிடையாது. தேர்தல் அரசியல் என்பது வேறாகும். இதில், ஒரு கட்சி தலைவர்கள், மற்றொரு கட்சி தலைவர்களை மாறி மாறி தங்கள் கருத்துக்களை சொல்வதும் அதற்கு பதில் கூறுவதும் இயல்பான ஒன்றாகும். இதில், எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தப்பித்துக் கொள்வதற்காக முயற்சி செய்து வருகிறார். அது மிக மிக கடினம் ஆகும்.

மேலும் படிக்க: தேஜ கூட்டணியில் இருந்து விலகல்.. தவெக கூட்டணியில் பாமக இணைய முடிவு? அமைச்சரவையில் செளமியாவுக்கு இடம்!

ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது ஜனநாயக உரிமை

இதே போல, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யப்படுகிறது. அதுவும் மிக மிக கடினம் ஆகும். எனவே, திமுக மற்றும் அதிமுக ஆகிய இருவருக்கும் இடையே தான் போராட்டம் நடக்கிறது. இதனால், எங்களுக்கு எந்த விதமான தேர்தல் போராட்டமும் கிடையாது. மக்கள் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால், இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்யும். ஒரு கட்சியில் சேர்வது என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் விருப்பம் மற்றும் ஜனநாயக உரிமை ஆகும்.

திமுகவுடன்- காங்கிரஸ் இணைய வாய்ப்பே கிடையாது

அதன் அடிப்படையில், முந்தைய இயக்கத்தின் கொள்கை பிடிக்கவில்லை, தலைமை பிடிக்கவில்லை, கோட்பாடு பிடிக்கவில்லை என்ற காரணங்களால் இந்த இயக்கம் நீண்ட காலத்துக்கு செல்லக்கூடிய ஒன்றாக இருக்காது என்ற காரணங்களாலும் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அதனால் தான் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள். திமுகவுடன் எதிர்காலத்தில் இணைய வாய்ப்பே கிடையாது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: திமுகவினர் சினம் கொண்ட சிங்கமாக மாறுவர்.. எனது அரசியல் அனுபவம் கூட அந்த அமைச்சரின் வயது கிடையாது.. பி.கே. சேகர்பாபு கொந்தளிப்பு!

Follow Us