AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு வழக்கு.. திமுக பிரமுகர் அதிரடி கைது… பின்னணி என்ன?

Srirangam Temple Land Case : திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு வழக்கில் தொடர்புடையதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுதி செயலாளரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு வழக்கு.. திமுக பிரமுகர் அதிரடி கைது… பின்னணி என்ன?
கைதான திமுக பகுதி செயலர்.
Deepan
Deepan | Published: 01 Oct 2026 17:39 PM IST

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உலக புகழ்பெற்ற வைணவ திருத்தங்களில் ஒன்றான அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக சொத்துக்கள் மற்றும் நிலங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. அந்த வகையில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகே ரூ. 50 கோடி மதிப்பில் 7,515 சதுர அடி அளவிலான கட்டடத்துடன் கூடிய நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் என்பவர் அபகரிக்க திட்டமிட்டு, அதற்காக கடந்த 2022- ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயார் செய்து அந்த நிலத்தை தனது பெயருக்கு முறைகேடாக மாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கோயில் நில பதிவை முடக்கி வைக்க கடிதம்

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கடந்த செப்டம்பர் 19- ஆம் தேதி திமுக பகுதி செயலாளர் ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்வது அல்லது அது தொடர்பாக மறுபதிவு செய்வதை தடுக்கும் வகையில் ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலருக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: சென்னை வாசிகளுக்கு மெகா குட் நியூஸ்.. இனி பரனூர் டோல்கேட்டில் நிக்கவே வேண்டாம்… வந்துச்சு புது டெக்னாலஜி!

ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் கைது

அந்த கடிதத்தின் அடிப்படையில், கோவில் நிலம் தொடர்பான பத்திரப்பதிவுகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமாரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் இன்று வியாழக்கிழமை காலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலி ஆவணங்கள் மூலமாக கோவில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முன் ஜாமீன் விசாரணைக்கு சென்ற நிலையில் கைது

இதில், சில தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ராம்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுவதற்காக ராம்குமார் புறப்பட்டு சென்ற நிலையில், அவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கையில் கத்தி-சீப்புடன் களமிறங்கிய தவெக எம்எல்ஏ.. தாராபுரத்தில் புதுவித கட்டிங் பிரசாரம்… அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

Follow Us