கள்ளக்காதலால் நேர்ந்த கொடூரம்.. சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்.. சென்னையில் கோர சம்பவம்!
Koyambedu Murder : சென்னையில் கள்ளக்காதலியின் 10 வயது மகனை கழுத்த நெரித்து கள்ளக்காதலன் கொலை செய்தார். இது தொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம், கோயம்பேடு நியூ காலனி 8- ஆவது தெருவை சேர்ந்தவர் பூவரசி. இவரது மகன் தருண் ( 9 வயது). அரசு பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வந்தான். பூவரசி, தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், பூவரசிக்கும், கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதன் காரணமாக இருவரும் கடந்த 3 மாதங்களாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழ்ச்செல்வன் மட்டும் வீட்டுக்கு சென்ற நிலையில் மது போதையில் இருந்து உள்ளார். அப்போது, பூவரசியை செல்போனில் அழைத்த தமிழ்செல்வன் உனது மகனை கொலை செய்யப் போவதாக தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
மகனை கொலை செய்ததாக தாய்க்கு தெரிவித்த கள்ளக்காதலன்
பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட தமிழ்ச்செல்வன் உனது மகனை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூவரசி வீட்டுக்கு சென்று பார்த்த போது, தருண் வீட்டில் பிணமாக கிடந்தார். சிறுவனை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு கள்ளக்காதலன் தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்.. ஆயுதப்படை காவலர் திடீர் மரணம்.. சோகத்தில் முடிந்த கதை!
கள்ளக்காதலி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கொடூரம்
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பூவரசியின் செல்போனுக்கு வேறு சிலர் தொடர்ந்து அழைத்து வந்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த தமிழ்ச்செல்வன், பூவரசியை கண்டித்துள்ளார். இதில், அவர்களுடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருவரிடையே, ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அங்கிருந்த பெண்கள் தமிழ்ச்செல்வனை திட்டி உள்ளனர். இதில், கோபமடைந்த தமிழ்ச்செல்வன், அந்த பெண்களை தட்டிக் கேட்காதது ஏன் என்று பூவரசியிடம் கேட்டு தாக்கியுள்ளார்.
தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு
தொடர்ந்து, தனது கையையும் அறுத்துக் கொண்டார். பெரிய அளவில் காயம் இல்லாத காரணத்தால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதல் உதவி அளித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்காமல் அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். இதில், ஆத்திரம் தீராத தமிழ்ச்செல்வம், வீட்டுக்கு சென்ற நிலையில், அங்கிருந்த பூவரசியின் மகனை துடிக்க துடிக்க கொலை செய்திருப்பது தெரியவந்தது. தலைமுறைவாக உள்ள தமிழ்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி நினைத்தாலும் தப்ப முடியாது.. அடுத்தடுத்து பாயும் பாலியல் புகார்கள்.. குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்!