AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? வெளியான புதிய அறிவிப்பு

New Voter Registration Rule : வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெறும் காலத்திற்கும், வழக்கமான பணிkNd நடைபெறும் காலத்திற்கும் இடையேயான படிவ நடைமுறைகள் வேறுபடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? வெளியான புதிய அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Oct 2026 19:21 PM IST

சென்னை, அக்.1 : வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெறும் காலத்திற்கும், வழக்கமான பணிkNd நடைபெறும் காலத்திற்கும் இடையேயான படிவ நடைமுறைகள் வேறுபடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாதபோது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் பயன்படும் ஆன்லைன் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைக்க தேவையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா?

எஸ்ஐஆர் பணி ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த முதன்முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அப்போது எஸ்ஐஆர் பணிக்காக பயன்படுத்தப்படும் படிவம் 6 உடன் இணைக்கப்படும் உறுதிமொழி படிவத்தை இணைக்க தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிக்க : கையில் கத்தி-சீப்புடன் களமிறங்கிய தவெக எம்எல்ஏ.. தாராபுரத்தில் புதுவித கட்டிங் பிரசாரம்… அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

அதாவது, எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாத காலகட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது, எஸ்ஐஆர் பணிக்காக உருவாக்கப்பட்ட உறுதிமொழி படிவத்தை தனியாக இணைக்க வேண்டியதில்லை. அந்த காலகட்டத்தில், வாக்காளர் பதிவு விதிகள், 1960ன் கீழ் பொருந்தக்கூடிய வழக்கமான படிவங்களே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவை தளத்திலும், புதிய வாக்காளர் பதிவு செய்வதற்காக படிவம் 6 தனியாகவும், எஸ்ஐஆர் தொடர்பான உறுதிமொழி படிவங்கள் நடைமுறைகள் தனியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சிறப்பு முகாம்கள்

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் தகுதியுடைய இளம் மற்றும் முதன்முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்தவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியானவர்கள் விண்ணப்பித்து தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

இதையும் படிக்க : சென்னை வாசிகளுக்கு மெகா குட் நியூஸ்.. இனி பரனூர் டோல்கேட்டில் நிக்கவே வேண்டாம்… வந்துச்சு புது டெக்னாலஜி!

புதிய வாக்காளராக பதிவு செய்ய விரும்புபவர்கள் பொதுவாக படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை தளத்திலும், 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்களுக்கான புதிய பதிவு வசதி வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதையும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் சரிபார்க்க முடியும். பெயர் இல்லாத தகுதியானவர்கள் உரிய நடைமுறையைப் பின்பற்றி பதிவு செய்யலாம்.

Follow Us