Tamil Nadu Weather Alert: அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழ்நாட்டில் அக்டோபர் 1, 2026 இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த 6 நாட்களுக்கும் தமிழகத்தில் பரவலாக மழை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக். 01 : தமிழ்நாட்டில் அக்டோபர் 1, 2026 இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், திருச்சி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, குமரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்காலில் அக்டோபர் 1, 2026 இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதே நேரத்தில், வடக்கு உள் கர்நாடகாவில் தொடங்கி, உள் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் வழியாக மன்னார் வளைகுடா வரை சுமார் 0.9 கி.மீ உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை ஒன்றும் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க : சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்தடை.. 9 மணி முதல் 2 மணி வரை சேவை துண்டிப்பு!




அந்த வகையில் அக்டோபர் 1, 2026 இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களில் மழையின்போது இடி மின்னலும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் இங்கும் இடி மின்னலுடன் 40–50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மாநிலத்தின் இதர பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 6 நாட்களுக்கான மழை நிலவரம்
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 2, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் இடி மின்னலுடன் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக் கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 3, 2026 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்றும் தமிழகத்தின் மற்ற இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 4, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பிற பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 5, 6, 2026 ஆகிய 2 நாட்களில் மழையின் மையம் உள் தமிழகத்தை நோக்கி நகரும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 7, 2026 தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : வணிக கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அக்டோபர் 1, 2026 மற்றும் அக்டோபர் 2, 2026 இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.