சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்தடை.. 9 மணி முதல் 2 மணி வரை சேவை துண்டிப்பு!
Chennai Power Cut List On October 1 2026 | சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் பகுதி நேர மின்தடை செய்யப்படும். இந்த நிலையில், இன்று தாம்பரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதிநேர மின்தடை செய்யப்பட உள்ளது.
சென்னை, அக்டோபர் 01 : பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் பகுதி நேர மின்தடை செய்யப்படும். அந்த வகையில் சென்னையில் இன்று (அட்கோபர் 01, 2026) சில பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது. அதாவது, சில குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், எந்த எந்த பகுதிகளில் இன்று மின்தடை ஏற்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் இந்த சில பகுதிகளில் இன்று பகுதி நேர மின்தடை
சென்னையில் தாம்பரம், ராமாபுரம், செம்பாக்கம், போரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்பட உள்ளது.
தாம்பரம்
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான தாம்பரத்தில் இன்று மாடம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம்தென், படுவாஞ்சேரி, கஸ்பாபுரம், செக்ரடேரியட் காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், விஜிபி சீனிவாச நகர், விஜிபி சரவணா நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நத்தஞ்சேரி, கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நத்தஞ்சேரி, கிருஷ்ணா நகர், காந்தி நகர், நகரக்பதி, நத்தஞ்சேரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
இதேபோல தாம்பரத்தின் இதர பகுதிகளான வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், கே.கே.சாலை, விஜயநகரம், சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்சன் நகர், தியானா ஸ்கை சிட்டி, ஸ்ரீ தேவி நகர், திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
இதையும் படிங்க : திமுகவினர் சினம் கொண்ட சிங்கமாக மாறுவர்.. எனது அரசியல் அனுபவம் கூட அந்த அமைச்சரின் வயது கிடையாது.. பி.கே. சேகர்பாபு கொந்தளிப்பு!
ராமாபுரம்
ராமாபுரம் பகுதியிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ராகவேந்திரா நகர், வள்ளுவர் சாலை, திருமலை நகர், ராயலா நகர், நடராஜன் சாலை, பெரியார் சாலை, மூகாம்பிகை தெரு, கே.பி.பொன்னுரங்கம் சாலை, அனீஷ் நகர், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
செம்பாக்கம்
செம்பாக்கம் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மணவாள நகர், ஜெயேந்திர நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்யம் நகர், நவநீதம் நகர், விஜிபி பொன் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
போரூர்
போரூர் சுற்று வட்டார பகுதிகளில் அககாசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, அம்பேத்கர் சாலை, ராஜீவ் காந்தி நகர், பாரதியார் நகர், புதுபேர், நந்தம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க : கள்ளக்காதலால் நேர்ந்த கொடூரம்.. சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்.. சென்னையில் கோர சம்பவம்!
குன்றத்தூர்
குன்றுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபாதை தெரு, தட்சர் தெரு, கன்னியப்பன் நகர், பொன்னியம்மன் நகர், திருவள்ளூர் தெரு, பெரிய தெரு, நவீதர் தெரு, துரைசாமி முதலியார் தெரு, லட்சுமி நகர், மோகன்லிங்க நகர், சின்ன தெரு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது.
திருவான்மியூர்
திருவான்மியூர் பகுதியில் கண்ணப்பன் நகர் 1வது மற்றும் 2வது பிரதான சாலை, ஏஜிஎஸ் காலனி, நடேசன் காலனி 2வது மற்றும் 3வது குறுக்குத் தெரு, ஸ்ரீ ராம் அவென்யூ 1வது-4வது குறுக்குத் தெரு, நாட்கோ காலனி, வேம்புலியம்மன் கோயில் தெரு, சுவாமிநாதன் நகர் 1வது மற்றும் 2வது இணைப்புத் தெரு, சுப்பிரமணி தெரு, ஈசிஆர் ஆகிய இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.
நங்கநல்லூர்
நங்கநல்லூர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. பி.வி.நகர், இந்து காலனி, என்.ஜி.ஓ.காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்பிஐ காலனி விரிவாக்கம், எஸ்பிஐ காலனி மெயின் ரோடு, ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், வோல்டாஸ் காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி, எஸ்பிஐ காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி, எஸ்பிஐ காலனி, காலேஜ் ரோடு, வேம்புலிசம்மன் தெரு, காந்திடசம்மன் தெரு. தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை, பழவந்தாங்கல் இந்த பகுதிகளில் தான் மின்தடை செய்யப்படும் பகுதிகள்.
இதையும் படிங்க : அறுந்து விழுந்த உயிர் மின் கம்பி.. துடிதுடித்து பரிதாபமாக பலியான அக்கா – தம்பி.. ராமநாதபுரத்தில் நெஞ்சை பிளக்கும் சோகம்!
பம்மல்
பம்மல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது. 7டிஎன் மெயின் ரோடு, 2வது-8வது குறுக்கு தெருக்கள், காந்தி ரோடு, இந்திராகாந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, கலைஞர் குறுக்கு தெரு, பெரியார் தெரு, இளங்கோ தெரு, மாருதி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ஈரட்டை பிள்ளையார் கோயில் தெரு, ஏழுமலை தெரு, நந்தனார் தெரு, பஜனை தெரு, பஜனை தெரு, பஜனை நடராஜன் தெரு ரங்கசாமி தெரு, எச்எல் காலனி முதல் பிரதான சாலை, தேவதாஸ் தெரு, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, வடிவேல் தெரு, கக்கன் தெரு, மருதுபாண்டி தெரு, வீரராகவன் தெரு, நல்ல தம்பி சாலை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.