AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“என்னை அசிங்கமாக பேசுறீங்க”.. மேடையில் தேம்பி அழுத சத்யபாமா – ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்..

Sathyabama Campaign: தொடர்ந்து பேசிய சத்தியபாமா, “என் மீது சுமத்தப்படும் பழி, பெண் என்று பாராமல் பேசப்படும் ஆபாசமான வார்த்தைகள்... என் மீது தவறு இருந்தால் நான் திரும்ப வந்திருக்க மாட்டேன்” எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து அவர் கண்கலங்கி மேடையிலேயே தேம்பி அழத் தொடங்கினார்.

“என்னை அசிங்கமாக பேசுறீங்க”.. மேடையில் தேம்பி அழுத சத்யபாமா – ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்..
மேடையில் தேம்பி அழுத சத்யபாமா - ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 30 Sep 2026 20:33 PM IST

செப்டம்பர் 30, 2026: தாராபுரம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா, மக்கள் மத்தியில் பேசுகையில் கண்கலங்கி மேடையில் அழுதபோது, தமிழக முதலமைச்சர் விஜய் அவரை ஆறத்தழுவி ஆறுதல் கூறியது தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தாராபுரம் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, அதிமுகவில் இருந்து சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சத்தியபாமாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிரசாரத்தில் எதிர்ப்புகள்?

இந்த நிலையில், சத்தியபாமா செல்லும் இடங்கள் எல்லாம் கடுமையான மக்கள் எதிர்ப்புகள் எழுந்து வருவதாகத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சத்தியபாமா பிரசாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தாராபுரம் தொகுதி தனது கையைவிட்டு சென்று விடுமோ என்ற ஒரு பயமும் சத்தியபாமாவிற்கு ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், இன்று நிகழ்ச்சியின்போது பேசிய சத்தியபாமா கண்கலங்கி அழுதார்.

“நாங்கள் துரோகிகள் கிடையாது”

மக்கள் மத்தியில் பேசிய சத்தியபாமா, “அதிமுக இயக்கத்தின் தலைமை பிடிக்காமல் வெளியே வந்தேனே தவிர, அதிமுக பிடிக்காமல் கிடையாது. நாங்கள் துரோகிகள் கிடையாது. என் மீது பழி சுமத்துகின்றனர்.

ஒரு பெண் என்றும் பாராமல் அவதூறாகவும், ஆபாசமான வார்த்தைகளாலும் திட்டுவதால், நான் தற்போது மொபைலே பார்ப்பதில்லை. அவ்வளவு ஆபாசமாக என்னைப் பேசுகிறார்கள். நான் அப்படி என்ன தவறு செய்தேன்? அம்மாவினுடைய உண்மையான உணர்வு எனக்குள் இருந்து வந்தது. இன்று ஒரு ரூபாய் பணம் கூட கொடுக்காமல் பதவிக்கு வந்த தூய தலைவர் தான் நமது முதலமைச்சர் விஜய்.

மேலும் படிக்க: “எளியவர்களை நிறுத்தி மன்னர்களை தோற்கடித்தோம்.. திமுகவின் கிளையாக மாறிவிட்ட அதிமுக.. முதல்வர் விஜய் காட்டம்..

என் மீது தவறு இருந்தால், அவர் ஏன் எனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப் போகிறார்? நானும் உங்களிடம் வந்து துணிச்சலாக ஓட்டு கேட்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேடையிலேயே தேம்பி அழுத சத்தியபாமா:

தொடர்ந்து பேசிய சத்தியபாமா, “என் மீது சுமத்தப்படும் பழி, பெண் என்று பாராமல் பேசப்படும் ஆபாசமான வார்த்தைகள்… என் மீது தவறு இருந்தால் நான் திரும்ப வந்திருக்க மாட்டேன்” எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து அவர் கண்கலங்கி மேடையிலேயே தேம்பி அழத் தொடங்கினார்.

சத்தியபாமாவை ஆறத்தழுவி ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்:

சத்தியபாமா அழுததைக் கவனித்த தமிழக முதலமைச்சர் விஜய், உடனடியாக அவரிடம் சென்று ஆறத்தழுவி ஆறுதல் கூறி சமாதானம் செய்தார். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து பேசிய சத்தியபாமா, “என் தொகுதி மக்களுக்கு நல்லது செய்வதற்குத்தானே வந்தேன். நான் வேறு எந்த நோக்கத்திலும் வரவில்லையே” எனக் குறிப்பிட்டார்.

Follow Us