தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
Heavy Showers in Coimbatore, Nilgiris, Erode Today | தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய வானிலை நிலவரம் மற்றும் மழை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 01 : கோயம்புத்தூர் (Coimbatore) உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 01, 2026) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்தும், எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சி, நாமக்கல், தேனி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.