AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வணிக கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Commercial Gas Cylinder Price Hiked In Chennai | சென்னையில் இன்று வணிக கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் நிலையில், வணிக கேஸ் சிலிண்டர் விலையில் இந்த மாற்றம் வந்துள்ளது.

வணிக கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Oct 2026 07:48 AM IST

சென்னை, அக்டோபர் 01 : சென்னையில் (Chennai) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை (Commercial Gas Cylinder Price) அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வணிக சிலிண்டர்கள் விலை ரூ.66.50 உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஓட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றுக்கான சிலிண்டர் செலவுகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிரடியாக உயர்ந்த வணிக கேஸ் சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலைகளில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் தான், அக்டோபர் 01, 2026 ஆன இன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் இன்று ரூ.66.50 உயர்வை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : ஆதார் பயோமெட்ரிக் இலவச அப்டேட்.. இன்றுதான் கடைசி.. சிறுவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

வணிக கேஸ் சிலிண்டர் விலை எவ்வளவு?

இதன் காரணமாக இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த விலையை விடவும், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.66.50 கூடுதலாக விற்பனை செய்யப்பட உள்ளது. அதாவது, விலை உயர்வுக்கு பிறகு வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.2,984-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. முன்னதாக ரூ.2,917.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக கேஸ் சிலிண்டர் தற்போது விலை உயர்வுக்கு பிறகு இந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : அக்டோபர் 1 முதல் ரயில்களில் தீவிர டிக்கெட் சோதனை – பயணிகளுக்கு எச்சரிக்கை!

கேஸ் சிலிண்டர் செலவு அதிகரிக்கும்

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதன் காரணமாக ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள், கேன்டீன்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் மாதாந்திர சமையல் எரிவாயு பட்ஜெட் உயர உள்ளது. இதனை ஈடு செய்ய ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் உணவுகளின் விலைகளை உயர்த்து வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Follow Us