AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அக்டோபர் 1 முதல் ரயில்களில் தீவிர டிக்கெட் சோதனை – பயணிகளுக்கு எச்சரிக்கை!

Indian Railways Ticket Checking Drive : ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதைத் தடுப்பது , சலுகை பயணம், குறிப்பிட்ட ஒதுக்கீடு மற்றும் ரயில்வே பாஸ் உள்ளிட்டவற்றன் மூலம் பயணம் செய்பவர்களின் தகுதியையும் சரிபார்க்கும் வகையில் அக்டோபர் 1, 2026 நாளை முதல் சிறப்பு டிக்கெட் சோதனை நடவடிக்கை தொடங்கப்படவுள்ளது.

அக்டோபர் 1 முதல் ரயில்களில் தீவிர டிக்கெட் சோதனை – பயணிகளுக்கு எச்சரிக்கை!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Sep 2026 12:27 PM IST

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதைத் தடுப்பது , சலுகை பயணம், குறிப்பிட்ட ஒதுக்கீடு மற்றும் ரயில்வே பாஸ் உள்ளிட்டவற்றன் மூலம் பயணம் செய்பவர்களின் தகுதியையும் சரிபார்க்கும் வகையில் அக்டோபர் 1, 2026 நாளை முதல் சிறப்பு டிக்கெட் சோதனை நடவடிக்கை தொடங்கப்படவுள்ளது. மத்திய ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அக்டோபர் 1, 2026 முதல் 31, 2026 வரை ஒரு மாத காலத்துக்கு இந்த தீவிர சோதனை நடத்தப்படுகிறது. முக்கிய ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, உள்ளூர் ரயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1 முதல் தீவிர டிக்கெட் சோதனை

வழக்கமான டிக்கெட் பரிசோதனையைவிட, இந்த சிறப்பு நடவடிக்கையில் சில வகை பயணிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக, சலுகைக் கட்டணத்தில் டிக்கெட் பெற்றவர்கள், குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் பெற்றவர்கள், ரயில்வே பாஸ் மூலம் பயணம் செய்பவர்கள் குழுவாக ஒரே டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள் ஆகியோரின் டிக்கெட் மற்றும் அதற்கான தகுதி ஆவணங்கள் பரிசோதிக்கப்பட உள்ளன.

இதையும் படிக்க : கர்ப்பிணிகளுக்கு ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்?

சலுகை அல்லது குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் பெற்ற பயணிகள், தங்களுக்கு அந்தச் சலுகை அல்லது ஒதுக்கீடு கிடைப்பதற்கான தகுதியை நிரூபிக்கும் அசல் அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் சாதாரண பயணிகள் பயன்படுத்தக்கூடிய ஆவணங்களில் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரி வழங்கிய புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி பாஸ்புக் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வங்கி கிரெடிட் கார்டு ஆகியவையும் குறிப்பிட்ட விதிகளின்படி ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக செல்போனில் இருக்கும் அடையாள அட்டையின் புகைப்படம் அல்லது நகல் மட்டும் வைத்திருப்பது மட்டும் போதாது. நம் கையில் அசல் ஆவணத்தை எடுத்துச் செல்வது முக்கியம். குழுவாகப் பயணம் செய்பவர்களும் இந்த விதியை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரே டிக்கெட்டில் பல பயணிகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பயணிகளில் குறைந்தது ஒருவராவது, தேவையான அசல் அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆவணம் இல்லாத நிலையில், அந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் அனைவரின் பயணமும் விதிகளின்படி செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாத பயணமாகக் கருதப்படும் சூழல் ஏற்படலாம்.

இதையும் படிக்க : வீட்டு உபயோக பொருட்களின் விலை 5-8% உயரப்போகிறது?.. தீபாவளிக்கு முன்பு நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் எவ்வளவு?

டிக்கெட் இல்லாமல் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் பயணம் செய்வதற்கான அபராதம் சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி கடந்த ஜூன் 20, 2026 முதல் குறைந்தபட்ச அபராதம் 250 ரூபாயில் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், உரிய டிக்கெட் அல்லது பயணத்திற்குத் தேவையான ஆவணங்கள் இல்லாமல் பிடிபடும் பயணிகள் முன்பைவிட அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

Follow Us