ரூ.52 லட்சம் சம்பள வேலையை விட்டுவிட்டு மோமோஸ் தொழில் தொடங்கிய நபர்.. தற்போது ஆண்டுக்கு ரூ.5 கோடி!
From Corporate to 5 Crore Rupees Momos Business | டெல்லியை சேர்ந்த ஒருவர் தனது ரூ52 லட்சம் சம்பளம் வரும் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக மோமோஸ் தொழில் தொடங்கியுள்ளார். தற்போது, அந்த தொழில் மூலம் ரூ.5 கோடி ஆண்டு வருமானம் ஈட்டுகிறார்.
செய்யும் வேலை பிடிக்கவில்லை என்றாலும் கூட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள பண தேவை என்பதால் பலரும் வேலைக்கு செல்கின்றனர். ஆனால், சிலரோ என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில், தாங்கள் செய்துக்கொண்டு இருக்கும் வேலையை விட்டுவிட்டு சுயமாக தொழில் தொடங்குகின்றனர். அந்த வகையில், ஆண்டுக்கு ரூ.52 லட்சம் சம்பளம் வரும் வேலையை விட்டுவிட்டு இளைஞர் ஒருவர் சுயமாக தொழில் தொடங்கி தற்போது ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார்.
இந்த நிலையில், யார் இந்த இளைஞர், அவர் என்ன தொழில் செய்து இந்த ஆண்டு வருமானத்தை பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கார்ப்பரேட் வேலை முதல் மோமோஸ் தொழில் வரை
டெல்லி NIFT (NIFT – National Institute Of Fashion Technology) கல்லூரியில் பட்டம் பெற்றவர் தான் இந்த 33 வயதான சாகேத் செளரவ். இவர் தனது வாவ் பிளக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை பிளிக்ஸ் ஸ்டாக் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. அதன் பிறகு நிறுவனத்தின் ப்ராடக்ட் மேனேஜராக பணியாற்றி வந்தார். அதிலும் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்தில் அவருக்கு ஆண்டு சம்பளம் ரூ.52 லட்சம் ஆகும். ஆனால், அவர் இவ்வளவு அதிக வருமானம் தரும் வேலையை ராஜினாமா செய்தார்.




இதையும் படிங்க : எல் நினோ எதிரொலி.. பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் RBI வட்டி விகிதத்தை உயர்த்தலாம்!
வேலையை விட்டுவிட்டு மோமோஸ் தொழில் தொடங்கிய சாகேத் செளரவ்
இவர் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனது அதிக சம்பளம் தரும் வேலையை ராஜினாமா செய்தார். ஆனால், அவர் வேலை செய்யும்போதே குருகிராமில் உள்ள அவரது சகோதரியின் உணவகத்திலும் சின்ன சின்ன வேலைகளை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு உணவின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அந்த உணவகத்தில் பல வகையான உணவுகள் இருந்தாலும் அங்கு மோமோஸ் தான் வாடிக்கையாளர்களின் பிரதான தேர்வாக இருந்துள்ளது.
இதையும் படிங்க : பிபிஎஃப் திட்டம் முதிர்ச்சி அடைந்தால் என்ன செய்ய வேண்டும்?.. இத கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இதன் காரணமாக அவருக்கு மோமோஸ் கடை திறக்கு எண்ணம் தோன்றியுள்ளது. அதனால், உணவகத்தின் வாசலில் சிறிய மோமோஸ் கடை ஒன்றை தொடங்கியுள்ளார். அதற்கு வரவேற்பு கிடைக்கவே அவர் தனது தொழிலை படிப்படியாக விரிவுப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தான் ஆண்டுக்கு ரூ.5 கோடி வருமானம் பெறும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.