AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!”.. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!!

Tamil Nadu Ranks First in Inflation Across India: கடந்த அக்டோபர் மாதத்திற்கான சில்லரை விலை பணவீக்கத்தில் 7.29 சதவீதத்துடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சராசரியை விடத் தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.

“விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!”.. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 13 Nov 2026 06:29 AM IST

நவம்பர், 13: நாட்டில் நிலவி வரும் பொருளாதாரச் சூழல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏற்ற இறக்கங்கள் குறித்து மத்திய அரசு அவ்வப்போது புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதத்திற்கான சில்லரை விலை பணவீக்கம் (Retail Inflation) தொடர்பான புதிய அறிக்கையை மத்திய புள்ளியியல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் தேசிய சராசரி பணவீக்கம் குறிப்பிட்ட அளவில் இருக்கும் நிலையில், சில மாநிலங்களில் இதன் தாக்கம் கடுமையாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சாதாரண மக்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பலரும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வரும் சூழல் நிலவுகிறது.

இதையும் படிக்க: மேகதாது அணை விவகாரம்.. டி.கே.சிவக்குமார் கூறுவது நடக்காது.. நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தடாலடி!

தேசிய சராசரியை விஞ்சிய விலைவாசி உயர்வு:

வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அக்டோபர் மாதத்தில் தேசிய அளவிலான சில்லரை விலை பணவீக்கம் சராசரியாக 6.09 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த அளவு கணிசமாக அதிகரித்து 7.29 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம், நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் சில்லரை விலை பணவீக்க உயர்வில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாகத் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம்:

நகர்ப்புறங்களை விடத் தமிழகத்தின் கிராமப்புறங்களிலும் விலைவாசி உயர்வு மிகத் தீவிரமாக இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 7.86 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6.84 சதவீதமாகவும் விலைவாசி உயர்வு பதிவாகியுள்ளது. மேலும், தேசிய உணவுப் பொருள் பணவீக்கம் 8.94 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் அது 11.69 சதவீதமாக உயர்ந்து தேசிய சராசரியை முந்தியுள்ளது. குறிப்பாகத் துவரம் பருப்பு, உளுந்து, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, சமையல் எண்ணெய் வகைகள், நெய், அரிசி மற்றும் காய்கறிகள், இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடந்த மாதத்தைக் காட்டிலும் அக்டோபர் மாதத்தில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? எதற்கும் நாங்கள் தயார்.. கே.ஏ.செங்கோட்டையன்!

பொதுமக்களிடையே பொருளாதாரச் சுமை:

அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், சாமானிய மக்களின் மாதந்திர பட்ஜெட் முழுமையாகச் சிதைந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தினருக்குப் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வைட்டுத் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான உரிய பொருளாதார மற்றும் சந்தை சீர்திருத்த நடவடிக்கைகளை அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us