இன்று வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை இருக்கும்?
Tamil Nadu Rainfall Alert: நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 13, 2026: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 6 நாட்களுக்கும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் தொடரும் மழை:
அதன்படி, நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல்? வட கடலோர மாவட்டங்களுக்கு மழை இருக்குமா ? வானிலை சொல்லும் தகவல்..
அதேபோல், நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
இதற்கிடையே, நவம்பர் 13-ஆம் தேதியான இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது நவம்பர் 14-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 15-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ.1000 கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை.. மாணவர்கள் ஆதார் மூலம் ரூ.70 கோடி கடன் மோசடி.. சேலத்தில் பெண் உள்பட இருவருக்கு காப்பு!
மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதன் நகர்வு மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தின் மழை நிலவரத்தில் மாற்றம் ஏற்படலாம்.
குறிப்பாக, தென் தமிழகத்தில் ஏற்கெனவே மழை பெய்து வரும் நிலையில், புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் வடகடலோர தமிழகத்திலும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புயல் உருவாகுமா, அது எந்தப் பகுதியில் நகரும் என்பது குறித்த தெளிவான விவரங்கள் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளின் அடிப்படையிலேயே தெரியவரும்.