AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனுஷின் 57-வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

Dhanush And Siruthai Siva Movie Update | தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்து 57-வது படமாக உருவாக உள்ள படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல்கள் வைரலாகி வருகின்றது.

தனுஷின் 57-வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Nov 2026 06:40 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வரிசையாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் முதலாவதாக கர படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ஒரு ஆழமான கதையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஓம் சாப்டர் 1. இந்த படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தனது 56-வது படத்திற்காக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் மதுரையில் கோலாகலமாக நடைப்பெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து தனுஷின் 57-வது படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தனுஷின் 57-வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?

தனுஷ் மற்றும் சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் நகைச்சுவை கலந்த முழுமையான அதிரடித் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சிறுத்தை சிவா தற்போது திரைக்கதையை மெருகேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இந்தப் படத்தின் மூலம் ஒரு வலுவான கம்பேக் நிகழ்த்த அவர் உறுதியாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Also Read… தொடங்கியது அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும்? வைரலாகும் தகவல்

Follow Us