இனி பணம் அனுப்ப வங்கி கணக்கு தேவையில்லை.. ஆர்பிஐ அசத்தல் அறிவிப்பு!
Public Provident Fund Maturity | பொதுமக்கள் முதலீடு செய்ய அரசு செயல்படுத்தும் அசத்தல் திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த நிலையில், இந்த திட்டம் முதிர்வு அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஒருவருக்கு வங்கி கணக்கு இருந்தால் மட்டும்தான் பணம் அனுப்பவோ, பெறவோ முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தான், இனி ஒருவருக்கு பணம் அனுப்ப வங்கி கணக்கு அவசியம் இல்லை என்ற சூழலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) உருவாக்கியுள்ளது. அதாவது வங்கி கணக்கு இல்லாதவர்களும் ரூ.50,000 வரை எளிதில் பணம் அனுப்பும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வங்கி கணக்கு இல்லாமல் ஒருவருக்கு பணம் அனுப்புவது குறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி பணம் அனுப்ப வங்கி கணக்கு தேவையில்லை : ஆர்பிஐ அசத்தல்
Domestic Money Transfer Direction 2026-ன் கீழ் பிராந்திய கிராமப்புற வங்கிகள், நகர்புற வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வணிக வங்கிகளிலும் இனி கணக்கு இல்லாதவர்களும் பணம் அனுப்பலாம், பெறலாம் என்ற முறை அமலுக்கு வர உள்ளது. உள்நாட்டு பண பரிவர்த்தனை சேவையை எளிதாக்கும் வகையில், இந்த முக்கிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Gold Price : மூன்று நாட்களில் ரூ.3,160 சரிந்த தங்கம் விலை.. கடும் சரிவுக்கு காரணம் என்ன?




கேஷ் பே அவுட் சர்வீஸ் அறிமுகம் செய்த ஆர்பிஐ
வங்கி கணக்கு இல்லாத நபர்களும் மிக சுலபமாக பணம் பெறும் வகையில், கேஷ் பே அவுட் சர்வீஸ் (Cash Pay Out Service) சேவையை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வங்கி கணக்கு வைத்துள்ள நபர்கள், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு பணம் அனுப்ப ஆர்பிஐ வழிவகை செய்துள்ளது. அதாவது, ஏடிஎம் அல்லது மற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகள் மூலம் பணத்தை ரொக்கமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் ரூ.1,600 சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!
ஒரு மாதத்திற்கு ரூ.25,000 வரை பண அனுப்ப முடியும்
வங்கி கணக்கு இல்லாமல் பணம் பெறுவதற்கு வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரி குறித்த விவரங்களை வங்கிகள் கட்டாயம் பராமரிக்க வேண்டும். இந்த சேவை மூலம் ஒருமுறை பண பரிவர்த்தனை செய்தால் ரூ.10,000 வரை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதேபோல ஒரு மாதத்திற்கு ரூ.25,000 வரை வங்கி கணக்கு இல்லாமல் பணம் செலுத்த முடியும்.