இனி வாக்காளர் அடையாள அட்டையே போதும்.. மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
Voter ID Is Enough To Get Benefits From Government Schemes | அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், இனி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் போதுமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியர்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. அரசின் நலத்திட்டங்களில் பயன்பெற வேண்டும், அரசின் உதவிகளை பெற வேண்டும் என்றால் ஆதார் கார்டை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், இனி அரசின் நலதிட்ட உதவிகளை பெற ஆதார் மட்டுமன்றி, இனி பயோமெட்ரிக் விவரங்கள் (Biometric Details) மற்றும் வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) ஆகியவை பயன்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் (Central Minister Rajiv Ranjan Singh) தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை பயன்பாடு குறித்து மத்திய அமைச்சர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி வாக்காளர் அடையாள அட்டையே போதும்
நவம்பர் 06, 2026 அன்று மத்திய பஞ்சாயத்து ராஜ் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரான ராஜீவ் ரஞ்சன் சிங், மக்கள் திட்ட பிரசாரம் 2027 குறித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆதார் வழங்கும் மையங்கள் அதிகரித்துவிட்டன. யார் பெயரை சொன்னாலும் அடுத்த 5 நிமிடங்களில் ஆதார் கார்டு கைக்கு வந்துவிடுகின்றன. எனவே, இனி அரசு உதவி பெற ஆதார் கார்டு அடிப்படையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சமோசா மூலம் உருவான சாம்ராஜ்யம்.. ரூ.200 கோடிக்கு அதிபதியான தம்பதி!




வாக்காளர் அடையாள அட்டை எண்
அதுமட்டுமன்றி, பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக அவர்களுடைய பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், எந்த எந்த திட்டங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் எதனையும் அமைச்சர் இன்னும் குறிப்பிடவில்லை.
இதையும் படிங்க : ATM-ல் பணம் எடுக்கும்போது கைக்கு பண வரமால் Debit ஆகிவிட்டதா?.. கவலை வேண்டாம்!
போலி பயனர்களை கண்டறியும் நடவடிக்கை?
தற்போது ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றில் மோசடிள் நடைபெறுகிறது. அதாவது, தகுதியற்ற பயனர்கள் ரேஷன் கார்டு மூலம் அரசின் நடத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். இதனை தடுக்க தான் அரசு ரேஷன் கார்டில் கேஒய்சியை (KYC – Know Your Customer) கட்டாயமாக மாற்றியது. அதன் மூலம் ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்யும் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் மற்றும் சேவைகள் வழங்கப்படும் என்று கட்டாயமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் கட்டாயமாக்கப்பட்டும் என அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.