AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.760 உயர்வு!

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.760 உயர்வு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Nov 2026 10:50 AM IST

சென்னை, நவம்பர் 09 : சென்னையில் (Chennai) தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று (நவம்பர் 09, 2026) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை

2026 தங்கம் விலையை மிக கடுமையாக பாதித்துள்ளது. காரணம், ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்தது. இவ்வாறு தங்கம் நிலையற்ற தன்மையை கொண்டு இருக்க புவிசார் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியது, அமெரிக்காவின் இடைக்கால தேர்தல் என பல்வேறு காரணிகள் உள்ளன.

இதையும் படிங்க : செப்டோவில் ஒரு மணி நேரத்திற்கு 14,000 தங்க, வெள்ளி நாணயங்கள்.. வாங்கி குவிக்கும் பொதுமக்கள்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,460-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.205-க்கும், ஒரு கிலோ ரூ.2,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us