சமோசா மூலம் உருவான சாம்ராஜ்யம்.. ரூ.200 கோடிக்கு அதிபதியான தம்பதி!
Haryana Couples 200 Crore Rupees Samosa Business | ஹரியானாவில் தம்பதி இருவர் சமோசா விற்பனை செய்வதன் மூலம் சுமார் ரூ.200 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களின் சாதனை பயணம் குறித்தும் அவர்கள் உருவாக்கிய சாம்ராஜ்யம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பதை விடவும், சொந்தமாக தொழில் தொடங்கி அதன் மூலம் வருமானம் ஈட்ட பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பலரும் தாங்கள் செய்துக்கொண்டு இருக்கும் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையை நடத்துகின்றனர். அந்த வகையில், ஹரியானாவை (Haryana) சேர்ந்த தம்பதி இருவர் சமோசா விற்பனை செய்து சுமார் ரூ.200 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில், ஹரியான தம்பதியின் இந்த சுவாரஸ்ய வாழ்க்கை பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கல்லூரி படிப்பு முதல் திருமண வாழ்க்கை வரை
ஹரியான மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிதி சிங் மற்றும் ஷிகர் தம்பதியினர். இவர்கள் குருசேகர பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயோடெக்னாலஜி படித்துள்ளனர். அங்குதான் இவர்கள் இருவரும் முதன் முதலில் சந்தித்துக்கொண்டுள்ளனர். இதன் பிறகு 2007 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த இவர்கள், வெவேறு பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : 421சிசி இன்ஜின்… ஹீரோ எக்ஸ்பல்ஸ் 450 லுக் மற்றும் சிறப்பம்சங்கள்!




ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வருமானம் பெற்று வந்தார்
நிதி சிங் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு மாத சம்பளம் ரூ.17,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது. அவர் அதனுடன் நின்றுவிடாமல் பல புரமோஷன்களை பெற்று 2017 ஆம் ஆண்டு, ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கும் நபராக மாறியுள்ளார். அதன் பின்பு அவர் ஷிகர் ஹைதராபாத்தில் உள்ள லைஃப் சென்ஸ் நிறுவனத்தில் எம்டெக் பயோ டெக்னாலஜி முடித்தார்.
சமோசாவை வைத்து பெரிய பிராண்டை உருவாக நினைத்த ஷிகர்
பர்கர், பீட்சாவை போல இந்தியாவில் சமோசாவை வைத்து பெரிய பிராண்டை உருவாக்க வேண்டும் என்ற கனவு ஷிகருக்கு கல்லூரியில் படிக்கும்போதில் இருந்தே இருந்து வந்துள்ளது. பர்கர், பீட்சா போன்ற உணவுகள் பெரிய கடைகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியர்களின் பிரபல உணவான சமோசா மட்டும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படுவதன் காரணமாக அவருக்கு இந்த யோசனை தோன்றியுள்ளது.
இதையும் படிங்க : உச்சத்தில் தங்கம் விலை.. இந்த தீபாவளிக்கு இந்தியர்கள் எப்படி தங்கம் வாங்குகின்றனர்?
நதி சிங் தன் தனது யோசனையை ஷிகரிடம் பகிர்ந்துள்ளார். ஷிகரும் அந்த யோசனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான், ஷிகர் தன்னுடையை வேலையை ராஜினாமா செய்து இருவரும் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர். பின்னர் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமோசா சிங் என்ற கடையை திறந்துள்ளனர். இந்த நிலையில், இந்த நிறுவனம் தற்போது ரூ.200 கோடி மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.