AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசியல் மீது வெறுப்பு இல்லை… ஆனால் – சூர்யா சொன்னது இதுதானா?

Actor Suriya Talks About Politics | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் சமீபத்தில் அரசியல் குறித்து வெளிப்படையாக பேசியதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த செய்தி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அரசியல் மீது வெறுப்பு இல்லை… ஆனால் – சூர்யா சொன்னது இதுதானா?
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Nov 2026 11:06 AM IST

தமிழ் சினிமாவில் நாயகனாகவும், நாயகியாகவும் நடித்து தமிழ் நாட்டு அரசியலில் பங்கேற்றவர்கள் நமது அரசியல் வரலாற்றில் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்ரே. தற்போதையை காலக் கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக கொடிகட்டி பறந்த போதே அதனை வேண்டாம் என்று கூறிவிட்டு அரசியலில் பங்கேற்று தனது மக்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வந்தவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் அரசியலுக்கு வரும் போதே தான் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு வந்தார். ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று தமிழ் நாட்டு மக்களிடையே அவர் கேட்டதற்கு இணங்க நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவர் அரசியலில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அரசியலிற்கு எண்ட்ரி கொடுக்க விருப்பம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அதற்கான வேலைகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா அரசியல் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அரசியல் குறித்து வெளிப்படையாக பேசிய சூர்யா?

அதன்படி நடிகர் சூர்யா பேசியதாவது, நான் அரசியலில் நுழையப் போவதில்லை. அதற்காக எனக்கு அரசியலின் மீது வெறுப்பு என்று அர்த்தமல்ல. நான் அரசியலை அமைதியாகவும் கூர்ந்து கவனித்து வருகிறேன். இளைஞர்கள் அரசியலைப் பற்றிய முழுமையான புரிதலுடன் முன்வர வேண்டும். அரசியல்வாதிகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முழு அர்ப்பணிப்புடன் யார் வேண்டுமானாலும் அரசியலில் நுழையலாம். சரியான பாதை எதுவென்று எனக்குத் தெரியாத பட்சத்தில், நான் அரசியலில் நுழைய மாட்டேன் என்று அவர் தெரிவித்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

Also Read… தியேட்டரில் 25 நாட்களைக் கடந்தது ஜெயிலர் 2 படம்… கொண்டாட்டத்தில் படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தில் இணைந்த அசோக் செல்வன் – இயக்குநர் வெளியிட்ட பதிவு

Follow Us