ஃபயரு… ஃபயரு… ஃபயரு… வெளியானது அரசன் படத்தின் ஃபயர் கிளிம்ஸ் வீடியோ
Vetri Maaran’s Arasan 'FIRE' Glimpse | இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப அரசன் படத்தில் இருந்து கிளிம்ஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் கைக் குழந்தையாக இருக்கும் போதே நடிப்பு வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). இவரது தந்தை டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவில் இயக்குநர், நாயகன், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். அவரது படங்களின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய சிலம்பரசன் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் சிலம்பரசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்க முடியாமல் இருந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் அவர்மீது வைத்து இருந்த நம்பிக்கை மற்றும் பாசத்திற்காக அவர்களுக்காக மீண்டும் ஒரு கம்ப் பேக் கொடுத்தார் நடிகர் சிலம்பரசன்.
அவர் கம்பேக் கொடுத்த பிறகு அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் அரசன். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவாகி வரும் இந்த அரசன் படம் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது படப்பிடிப்பு பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
வெளியானது அரசன் படத்தின் ஃபயர் கிளிம்ஸ் வீடியோ:
தொடர்ந்து 11 மாதங்களாக படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த அரசன் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் ரசிகர்களை சமாதானம் செய்யும் வகையில் அரசன் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசன் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… 3 நாட்களில் ரன்பீர் கபூரின் ராமாயணா படம் எத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளது? வைரலாகும் தகவல்!
தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
They call the KING “DAAS”! 👑
📢Glimpse into ARASAN’s world soon!
Happy Diwali! 🪔 Let the Fireu works continue💥
▶️ https://t.co/gQZpwKSnhH#VetriMaaran @SilambarasanTR_ @VijaySethuOffl @anirudhofficial
@priyankaamohan @GTelefilms @imManishShah #Yogalakshmi @iYogiBabu @VelrajR #Jacki @RIAZtheboss #fireufireufireu— Kalaippuli S Thanu (@theVcreations) November 8, 2026
Also Read… கென் கருணாஸின் அடுத்த பட இயக்குநர் இவர்தானா? வைரலாகும் தகவல்



