AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இத எதிர்பார்களையே… சிலம்பரசன் – கீர்த்திஸ்வரன் கூட்டணியில் இணையும் பிரபல நடிகை.. அடடே இவரா?

Silambarasan And Keerthiswaran Movie Actress: தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுவரும் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் சிலம்பரசன். இவர் டியூட் பட இயக்குநர் கீர்த்திஸ்வரன் கூட்டணியில் இணைவதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் நடிகை குறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது.

இத எதிர்பார்களையே… சிலம்பரசன் – கீர்த்திஸ்வரன் கூட்டணியில் இணையும் பிரபல நடிகை.. அடடே இவரா?
சிம்பு மற்றும் கீர்த்திஸ்வரன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Oct 2026 18:26 PM IST

நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதலே இருந்துவருகிறார். தனது தந்தை இயக்கிய திரைப்படத்தினால் சினிமாவில் நாயகனாக நுழைந்த நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் ஹீரோவாகவே திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2025ல் தக் லைஃப் (Thug Life) என்ற படம் வெளியான நிலையில், எதிர்பார்த்திருந்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்திற்கு பின் ஒரு ஆண்டாக இவரின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது இவர் வெற்றிமாறனின் (Vetri Maaran) இயக்கத்தில் அரசன் (Arasan Movie) என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில், ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்திற்கு பின் உடனடியாக டியூட் பட (Dude Movie) இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கத்தில் புதிய படத்தில் சிலம்பரசன் இணைவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு பிறகே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விதத்தில் சிம்பு x கீர்த்திஸ்வரன் கூட்டணி படத்தில் இணையும் நடிகை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அது யார் என விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: யாருப்பா டிராக்டர்… ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் இயக்குநர் இவரா?

கீர்த்திஸ்வரன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் இணையும் நடிகை:

சிலம்பரசன் மற்றும் கீர்த்திஸ்வரன் கூட்டணியில் உருவாகும் படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்படுகிறதாம். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் அதிரடி, தர லோக்கல் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ள நிலையில், ஏற்கனவே ஒரு பாடல் தயாராகிவிட்டதாம். அந்த விதத்தில் இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷின் குரலில்.. துல்கர் சல்மானின் ஏஒடி படத்திலிருந்து ‘ராதே ராதே’ பாடல் வெளியீடு!

இந்த இருவரின் காம்போ இறுதியாக இது நம்ம ஆளு என்ற படத்தில் இறுதியாக நடித்திருந்தனர். 2016ல் இப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இப்படத்தில் இவர்கள் கூட்டணி உறுதியானால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலம்பரசன் மற்றும் கீர்த்திஸ்வரன் கூட்டணி குறித்து வைரலாகும் பதிவு:

சிலம்பரசன் தற்போது அரசன் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் உள்ளார். இந்த படத்திற்கு முன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் இணைவதாக இருந்தது. தற்போது அஸ்வத் மாரிமுத்து ரஜினியின் தர்மன் படத்தை இயக்கிவருகிறார். இந்த் படத்தின் ஷூட்டிங்கை முடித்ததும் சிலம்பரசனுடன் இணைவார் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் கேப்பில் சிலம்பரசன் கீர்த்திஸ்வரனின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us